×
 

திக்.. திக்.. நிமிடங்கள்..! விஜய் ஆட்சி அமைப்பாரா..? தவெக ஆதரவு குறித்து சிபிஎம் ஆலோசனை..!

தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக சிபிஎம் கட்சி ஆலோசனை நடத்தி வருகிறது.

தமிழக அரசியல் களம் தற்போது மிகுந்த பரபரப்பு மற்றும் பதற்றத்திற்கு உள்ளாகியுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தலைமையிலான கட்சி 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், பெரும்பான்மைக்கு இன்னும் 10 இடங்கள் குறைவாக உள்ளது. இதனால் ஆட்சி அமைக்கும் பணியில் தொடர்ந்து இழுபறி நிலவுகிறது.

ஆளுநர் மாளிகைக்கு சென்ற தவெக தலைவர் ஜோசப் விஜய் ஆளுநர் அர்லேகரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அப்போது தவெக மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தையும் ஆளுநரிடம் விஜய் வழங்கினார். அப்போது ஆட்சி அமைத்த பின்பு பெரும்பான்மையை நிரூபிப்பதாக விஜய் ஆளுநரிடம் தெரிவித்ததாக கூறப்பட்டது. இருப்பினும் பெரும்பான்மையின் நிரூபித்தால் தான் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க முடியும் என்று ஆளுநர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி ஐந்து இடங்கள் கொடுத்த நிலையில் இப்போது 113 எம்எல்ஏக்கள் ஆதரவு தமிழக வெற்றி கழகத்திற்கு இருக்கிறது. மேலும் ஐந்து எம்எல்ஏக்கள் ஆதரவு தேவைப்படுகிறது. தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு தரவேண்டும் என கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் பற்றி ஆகியவற்றுக்கு தமிழக வெற்றி கழகம் கடிதம் எழுதியது. நேரில் சென்றும் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் ஆதரவு கேட்டுள்ளனர். இந்த நிலையில், தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு அளிப்பதா இல்லையா என்பது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆலோசனை நடத்தி வருகிறது.

இதையும் படிங்க: தவெக நீதிமன்றத்தை நாடலாம்.. மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் அறிவுறுத்தல்..!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் செயற்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இன்னும் சற்று நேரத்தில் தமிழக வெற்றிக்கழகத்திற்கு ஆதரவு தெரிவிப்பது குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் சற்று நேரத்தில் விஜய்க்கு ஆதரவு கொடுப்பதா என்பது குறித்து அறிவிக்க இருக்கின்றனர். கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலைப்பாட்டை பொருத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியும் இன்று முடிவை அறிவிக்கிறது. விஜய் முதலமைச்சர் ஆகுவாரா என்ற பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கும் நிலையில் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு அளிப்பது தொடர்பான முடிவை இன்று அறிவிக்க உள்ளனர். 

இதையும் படிங்க: அவசரப்பட்டு போகாதீங்க..! கூட்டணி கட்சி தலைவர்களுக்கு ஸ்டாலின் அறிவுறுத்தல்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share