#BREAKING: அலட்சியத்தால் நிகழ்ந்த விபத்து.. கேட் கீப்பர் அதிரடி கைது! தொடரும் விசாரணை..!
பள்ளி வேன்மீது ரயில் மோதுவதற்கு காரணமாக இருந்த கேட் கீப்பரை கைது செய்த விசாரித்து வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் செம்மகுப்பத்தில் பள்ளி வாகனம் மீது ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். பள்ளி வாகனத்தில் நான்கு மாணவர்கள் சென்ற நிலையில் நிவாஸ், சாருமதி உள்ளிட்டோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட வழியில் செழியன் என்ற மாணவர் உயிரிழந்துள்ளார். மற்றொரு மாணவன் விஸ்வேஷ் மற்றும் வேன் ஓட்டுனர் சங்கர் ஆகியோர் கடலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் அக்காவும், தம்பியும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ரயில்வே கேட் கீப்பர் தான் இந்த கோர விபத்துக்கு காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். அவரது அலட்சிய போக்கால் தான் விபத்து நிகழ்ந்துள்ளதாகவும் கூறுகின்றனர். தொடர்ந்து கேட் கீப்பர் பங்கஜ் ஷர்மாவை கைது செய்துள்ளனர். வேன் ஓட்டுனர் கேட்டுக் கொண்டதால் தான் கேட் திறக்கப்பட்டதாக ரயில்வே தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு இருக்கும் நிலையில், ரயில் வரும்போது கேட் கீப்பர் தூங்கியதால் தான் விபத்து ஏற்பட்டதாக குற்றம் சாட்டப்படுகிறது. இதில் எது உண்மை என்பது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: அஜித் குமார் கொலை வழக்கில் திடீர் திருப்பம்... திடுக்கிடும் தகவல்கள்!
இந்த நிலையில் பள்ளி வேன் மீது ரயில் மோதியதில் இறந்த மாணவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் நிவாரணமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு 2.5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு 50,000 நிவாரணம் வழங்கப்படும் என ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு விதிகளை மீறியதால் கேட் கீப்பர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் உயிரிழந்த மாணவர்களுக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளது.
இதனிடையே, அமைச்சர் சி.வி.கணேசனும் மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார். கடலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமாரும் ஆய்வு செய்தார். மேலும், விபத்து நடந்த இடத்தில் விழுப்புரம் சரக டிஐஜி உமா நீரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். விபத்து பகுதியில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அவர் கேட்டறிந்தார்.
இதையும் படிங்க: தலைக்கேறிய போதை! கணவனின் வெறியாட்டம்... மனைவியை துரத்தி துரத்தி வெட்டிய கொடூரம்!