×
 

தோனி... தோனி... மதுரை ஏர்போர்ட் அதிர குஷியை வெளிப்படுத்திய தொண்டர்கள்...!

மதுரைக்கு வந்தடைந்த கிரிக்கெட் வீரர் தோனிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தமிழகத்தில் கிரிக்கெட் விளையாட திறமையான வீரர்கள் இருக்கும்போதிலும் அவர்களுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் குறைவாகவே இருந்து வந்தன. இதனால் மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி போன்ற தென் மாவட்டங்களைச் சேர்ந்த இளம் வீரர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்த நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய நிலை இருந்து வந்தது.

இந்த குறைபாட்டை போக்கும் வகையில் வேலம்மாள் கல்வி அறக்கட்டளை தங்களது வளாகத்திலேயே அதிநவீன கிரிக்கெட் மைதானம் ஒன்றை உருவாக்கியுள்ளது. தென் மாவட்ட கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு ஒரு மிகப்பெரிய மைல்கல்லாக இது பார்க்கப்படுகிறது. உயர்தர ஆட்டங்களில் உள்ளூர் வீரர்கள் பங்கு பெரும் வகையிலும் பயிற்சி பெறவும் இந்த மைதானம் உதவும் வகையில் உருவாக்கப்பட்டது.

வேலம்மாள் கிரிக்கெட் மைதானம் என்ற பெயரிடப்பட்டுள்ள இதனை சர்வதேச போட்டிக்கு தேவையான அனைத்து வசதிகளையும் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. சக்தி வாய்ந்த மின்விளக்குகள் பொருத்தப்பட்டு இருப்பதால் பகல் இரவு போட்டிகளையும் நடத்த முடியும் என கூறப்பட்டுள்ளது. மேலும் ஐந்தாயிரம் பார்வையாளர்கள் அமர்ந்து போட்டிகளை கண்டு ரசிக்கும் வகையில் கேலரிகளும், வீரர்களுக்கான ஓய்வறைகளும் என பல்வேறு நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டது.

இதையும் படிங்க: இந்த கொடுமைக்கு ஒரு முடிவில்லையா?... குடிநீர் தொட்டியில் மலம்... மதுரையில் பெரும் பரபரப்பு...!

இந்த கிரிக்கெட் மைதானத்தை மகேந்திர சிங் தோனி திறந்து வைப்பார் என கூறப்பட்டது. இதற்காக கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி மதுரைக்கு வந்தடைந்தார். மதுரை விமான நிலையத்தில் வந்து இறங்கிய தோனியை பார்த்ததும் ஆரவாரத்தில் ரசிகர்கள் கூச்சலிட்டனர். தோனி… தோனி என மதுரை விமான நிலையமே அதிரும் அளவுக்கு தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.

இதையும் படிங்க: அடச்சீ... பெண்களை படம் பிடித்து ரசித்த மின்வாரிய அலுவலர்... கையும் களவுமாக மாட்டிய சம்பவம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share