வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
இந்தியா

தமிழ்நாடு அரசியல் செய்யுறாங்க… பழியை தூக்கிப் போட்ட டி. கே. சிவக்குமார்..!

மேகதாது விவகாரத்தில் தமிழகத்தின் மீது கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமார் குற்றம் சாட்டியிருக்கிறார்.

காவிரி நதி நீர் பங்கீடு பிரச்சினை இந்தியாவின் மிக நீண்டகால இடைமாநில நீர் சர்ச்சைகளில் ஒன்று. இந்தப் பிரச்சினையில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே தொடர்ந்து வரும் மோதலுக்கு மத்தியில், மேகதாது அணை திட்டம் மீண்டும் முக்கியப் பேசுபொருளாகியுள்ளது. 2025 நவம்பர் 13 அன்று உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவு இந்த விவகாரத்தில் ஒரு முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மேகதாது கர்நாடகாவின் பெங்களூரு தெற்கு மாவட்டத்தில் உள்ள கனகபுரா தாலுகாவில் காவிரி ஆற்றின் மீது கர்நாடக-தமிழ்நாடு எல்லைக்கு அருகில் அமைந்துள்ள இடம். கர்நாடக அரசு இங்கு சமநிலை நீர் தேக்க அணை கட்டும் திட்டத்தை முன்மொழிந்துள்ளது. இந்தத் திட்டம் சுமார் 67.16 டி.எம்.சி. நீரைத் தேக்கி வைக்கும் திறன் கொண்டதாகவும், 400 மெகாவாட் மின்சக்தி உற்பத்தியுடன் கூடியதாகவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மொத்த மதிப்பு சுமார் 9,000 கோடி ரூபாய் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த அணை பெங்களூரு மற்றும் அதைச் சுற்றிய பகுதிகளின் குடிநீர் தேவையை நிறைவேற்றவும், நீர் மேலாண்மையை மேம்படுத்தவும் உதவும் என்று கர்நாடகா கூறுகிறது. தமிழ்நாடு அரசு மற்றும் அரசியல் தலைவர்கள் இந்தத் திட்டத்தை காவிரி நீர் பங்கீட்டு உத்தரவுகளுக்கு எதிரானது என்று கருதுகின்றனர்.

இதையும் படிங்க: கர்நாடக அரசியலில் வரலாற்று மாற்றம்..!! ஜூன் 1ம் தேதி டி.கே. சிவக்குமார் பதவியேற்பு..!!

இந்த பிரச்சனை நீடித்து வரும் நிலையில் தமிழ்நாடு தான் அரசியல் செய்கிறது என்ன கர்நாடகா முதலமைச்சர் டி.கே. சிவகுமார் குற்றம் சாட்டியுள்ளார். மேகதாது விவகாரத்தில் தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளும் தொடர்ந்து அரசியல் செய்வதாக கா்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமாா் தெரிவித்தார். கடந்த 30 – 40 ஆண்டுகளாக இதை எதிர்த்து வருகின்றனர் என்றும் ஏற்கனவே நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டது எனவும் தெரிவித்தார். தற்போது இந்த விவகாரம் மத்திய அரசின் கையில் உள்ளது என்றும் டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார். 

இதையும் படிங்க: கைமாறும் அதிகாரம்..!! பதவி விலகுகிறாரா சித்தராமையா..?? கர்நாடக அரசியலில் பரபரப்பு..!!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
ஜெகன் மோகன் ரெட்டி வீட்டு திருமணம்: நேரில் வாழ்த்திய முதலமைச்சர் விஜய் மற்றும் த்ரிஷா!தமிழ்நாடு
காசிமேடு மீனவர்கள் உயிரிழப்பு: தவெக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கண்டனம்!தமிழ்நாடு
ஆந்திரக் கடலில் உயிரிழந்த சென்னை மீனவர்கள்: தலா ₹7 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளி பரிசுப் பொருட்கள் விநியோகம்.. தேர்தலுக்கு முன்பே களமிறங்கிய தவெக! ரகுபதி பரபரப்பு குற்றச்சாட்டு!!தமிழ்நாடு
தீபாவளி பண்டிகை: சென்னை மெட்ரோ ரயில்களில் மாலை நேர ‘பீக் ஹவர்ஸ்’ சேவை நீட்டிப்பு!தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी