தேர்தல்னு வந்துட்டா திமுக-காரங்கள அடிச்சுக்க ஆளே இல்ல! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
தேர்தல்னு வந்துட்டா தி.மு.க.காரங்களை அடிச்சிக்க ஆளே இல்லனு தமிழ்நாடே சொல்லும் என முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான மு.க.ஸ்டாலின், கட்சியின் நிர்வாகிகளுடன் தொடர்ந்து ஆலோசனைகள் நடத்தி வருகிறார். இந்த ஆலோசனைகள், 2026-ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராவதற்கும், கட்சியின் அமைப்பை வலுப்படுத்துவதற்கும், மக்களிடையே திமுகவின் செல்வாக்கை மேலும் விரிவாக்குவதற்கும் முக்கியமானவையாக அமைந்துள்ளன.
இதன் ஒருபகுதியாக திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. காணொளி காட்சி வாயிலாக நடைபெற்ற இந்த கூட்டத்தில் அனைத்து மாவட்ட செயலாளர்களும் கலந்து கொண்டனர். திமுகவின் முப்பெரும் விழா பற்றியும் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு அறிவுரைகளை மாவட்ட செயலாளர்களுக்கு வழங்கினார்.
இதனிடையே, தேர்தல்னு வந்துட்டா தி.மு.க.காரங்களை அடிச்சிக்க ஆளே இல்லனு தமிழ்நாடே சொல்லும் என முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். நம் மண்,மொழி,மானம் காக்க ஒரு கோடி குடும்பங்கள் ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பில் இணைந்துள்ளதாக தெரிவித்தார்.
வரும் 15-ஆம் நாள் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளில், தமிழ்நாட்டில் உள்ள 68 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளைச் சேர்ந்த இக்குடும்பங்கள் கூடி உறுதிமொழி ஏற்பது என்றும், 20-ஆம் நாளன்று ஒவ்வொரு கழக மாவட்டத்திலும் மாபெரும் கூட்டங்கள் நடத்தி உறுதிமொழி ஏற்பது என்றும் இன்றைய மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
கழகத்தின் வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் முப்பெரும் விழாவுக்கு எல்லோரையும் எதிர்பார்த்துக் காத்திருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். செப்டம்பர் 17ஆம் தேதி கரூரில் திரள்வோம் என்றும் கழக வெற்றி நோக்கி பயணத்தை தொடர்வோம் எனவும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ELECTION தான் TARGET! "ஓய்வு" என்பதையே மறந்து விடுங்கள்... திமுக நிர்வாகிகளுக்கு முதல்வர் அறிவுரை!
இதையும் படிங்க: சும்மா உருட்டக்கூடாது! முதல்வரின் வெளிநாட்டு பயணம் பற்றி இபிஎஸ் சரமாரி கேள்வி...