×
 

வழக்கம்போல வாந்தி எடுத்து வச்சிருக்கீங்களே..? பல்டி அடிக்க கேவலமா இல்லையா..? திமுக தாக்கு..!!

முதலமைச்சர் விஜய் பேச்சு குறித்து திமுக கடுமையாக விமர்சித்துள்ளது.

திருச்சி கிழக்கு தொகுதியில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் முதல்வர் விஜய் பேசி இருந்தார். அதனை திமுக விமர்சனம் செய்துள்ளது. கட்சித் தலைவரா பொறுப்பில்லாமல் பேசிட்டு இருந்தவரு, ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த பிறகாவது பொறுப்போடு பேசுவார்ன்னு எதிர்பார்த்தா வழக்கம் போல, அந்த பொறுப்பிற்கு உரிய எந்த கண்ணியத்தையும் கடைப்பிடிக்காம வாந்தி எடுத்திருக்கிறார் என்று கூறியுள்ளது. “6 மாசம் அமைதியா இருப்போம்னு சொன்னவங்களால 6 நாள் கூட சும்மா இருக்க முடியல!” என நீங்க சொல்றீங்க.

ஆனா இந்த 20 நாட்கள்ல 25+ கொலைகள், 4 இரட்டைக் கொலைகள், 20+ பாலியல் குற்றங்கள் நடந்திருக்கு.. ஒரு முதலமைச்சர் ஆ அதுக்கு கொஞ்சம் கூட பொறுப்பு எடுத்துக்காம இருக்கீங்க ஓகே.. ஆனா அதுக்கெல்லாம் கொஞ்சம் கூட வருத்தமோ, சோகமோ கூட உங்க மூஞ்சில இல்லையே சார் என்று கேட்டுள்ளது.

நடக்கற சட்ட ஒழுங்கு பிரச்சினைகளை பத்தி பேச கூட உங்களுக்கு வக்கு இல்லை, திராணி இல்லை என்றும் ஆனால் அதை எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டத்தான் செய்யும் எனவும் அது ஜனநாயக கடமையும் கூட என்றும் கூறி உள்ளது. செய்தியாளர்கள சந்திக்காம SCRIPT PAPER வச்சு நீங்க டையலாக் பேசறதும், சட்டப்பேரவை எதிர்கட்சித்தலைவர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லத் தெரியாம திருதிருன்னு உம்முன்னு, கம்முன்னு நீங்க இருந்தத தமிழ்நாடே பாத்துச்சி CM SIR என்று கிண்டலடித்து உள்ளது.

இதையும் படிங்க: "வாயில நல்லா வந்துடும்".. முதல்வர் பேச்சால் சர்ச்சை..! அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்..!!

அப்புறம், மாதம் 200 UNIT மின்சாரம், பயிர்க்கடன் தள்ளுபடின்னு சொல்லிட்டு பாதி மக்களை ஏமாத்த வெக்கமா இல்லையா சார் என்றும் இதுக்கும் திமுகதான் காரணம்னு நீங்க கடிச்சி வைப்பீங்க., உங்க குணமே அதானே எனவும் சாடியது. பிப்ரவரி மாத இடைக்கால பட்ஜெட்லயே வருவாய் பற்றாக்குறை, கடன்சுமை எவ்வளவுன்னு அரசு சொன்ன பின்னாடி தானே நீங்க தேர்தல் அறிக்கை வெளியிடீங்க?., அந்த அறிக்கையிலேயே “இந்த கடன் அளவை சாக்குப் போக்காக பயன்படுத்த மாட்டோம்”ன்னு சொல்லிட்டு இப்போ பல்டி அடிக்க உங்களுக்கு கேவலமா இருக்காதுதான் என்றது. 

இனியாவது நசநசன்னு பொய்களை அரைவேக்காட்டுத்தனமா பேசாம, முதலமைச்சரா உண்மைகளை, ஒழுங்கா பேச கத்துகோங்க என்றும் நாட்ல என்ன நடக்குதுன்னு கண்ணத் திறந்து பாருங்க எனவும் கூறியுள்ளது. 

இதையும் படிங்க: உயிரைக் கொடுத்து பிரச்சாரம் செய்தேன்..! ஆனால்... வைகோ பரபரப்பு பேட்டி..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share