×
 

இன்னும் அஞ்சு மாசம் தான் முதல்வரே! இனியும் பொருத்துக்க முடியாது… பூந்து விளாசிய அண்ணாமலை…!

சென்னை திருமங்கலத்தில் பாஜக நிர்வாகி கத்தியால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை திருமங்கலத்தில் பாஜக பிரமுகர், திமுக நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகின. இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. நில ஆக்கிரமிப்புக்கு எதிராகக் குரல் கொடுத்ததால் பாஜக மாவட்ட நெசவாளர் அணித் தலைவர் மணிகண்டன் திமுக பிரமுகரால் தாக்கப்பட்டுள்ள கொடூரம் கண்டனத்திற்குரியது என்று பாஜகவினர் தெரிவித்து வருகின்றனர்.

ஆளும் கட்சி ஆதரவில் அரசு சொத்துகளை ஆக்கிரமிக்கும் திமுக உடன்பிறப்புகள் குறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மணிகண்டன் புகார் அளித்த நிலையில், பட்டப்பகலில் அவரது வீட்டு வாசலிலேயே கத்தி மற்றும் உருட்டுக்கட்டையால் திமுக பிரமுகர் ஆறுமுகம் சரமாரியாகத் தாக்கியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. இது தான் சட்டம் ஒழுங்கின் லட்சணமா என்றும் இது தான் திராவிட மாடலா எனவும் கேள்வி எழுப்பி எழுந்துள்ளது.

ஏற்கனவே திமுக ஆட்சியை தமிழக பாஜகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். தற்போது பாஜக பிரமுகரை திமுக நிர்வாகி தாக்கி உள்ளதாக கூறப்படும் சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இது என்ன மாதிரியான அணுகுமுறை என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

இதையும் படிங்க: போராட விட்டு வேடிக்கை பார்க்கும் திமுக அரசு… அண்ணாமலை கடும் கண்டனம்..!

பாஜக நிர்வாகி மணிகண்டன் ஏ.வி.எல், அரசாங்க நிலத்தை அபகரிக்கும் ஆறுமுகத்தின் திட்டம் குறித்து காவல்துறையினருக்குத் தெரிவிக்கத் துணிந்ததால், திமுக நிர்வாகி ஆறுமுகத்தால் அவரது சொந்த வீட்டிற்கு வெளியே கொடூரமாகத் தாக்கப்பட்டார் என்று கூறினார். இன்னும் 5 மாதங்கள்… இன்னும் 5 மாதங்கள் மட்டுமே என்றும் ஆட்சி என்று போர்வையில் மிரட்டல், ஊழல் மற்றும் வன்முறையை தமிழகம் இனி பொறுத்துக்கொள்ளாது எனவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ரோட்ல உட்கார்ந்து பிச்சையா எடுக்க முடியும்? டென்ஷன் ஆகிட்டாரு போல... அண்ணாமலை ஆவேச பதில்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share