ஒப்பந்ததாரரிடம் அரிவாளை ஓங்கிய EX. எம்.எல்.ஏ., பூமி பூஜை விழாவில் பதற்றம்!
பூமி பூஜையின் போது ஒப்பந்ததாரரிடம் முன்னாள் திமுக எம்எல்ஏ அரிவாளை ஓங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவிலில் அமைய உள்ள புதிய தீயணைப்பு நிலைய கட்டடத்திற்கான பூமி பூஜை விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திமுக முன்னாள் எம்எல்ஏ உதயம் சண்முகம் பங்கேற்றார். அப்போது தனக்கு ஏன் அழைப்பு கொடுக்கவில்லை என சுற்றியுள்ளவர்களிடம் கோபம் கொண்டார். மேலும் தேங்காய் உடைக்கும் போது அறிவாளை வைத்து ஒப்பந்ததாரரிடம் கோபப்பட்டதுடன் அறிவாளை ஓங்கி மிரட்டலும் எடுத்துள்ளார்.
இதனால் சுற்று இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். முன்னாள் எம்எல்ஏ உதயம் சண்முகம் அறிவாளை ஓங்கி கோபப்பட்ட நிகழ்வு தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: கையில் உதயநிதி, அன்பில் மகேஷ் TATTOO... ஏழைப் பெண்கள் தான் டார்கெட்! திமுக நிர்வாகி மீது இளம்பெண் பகிர் குற்றச்சாட்டு..!
இதையும் படிங்க: கொள்கை நெறி தவறாதவர்..! சோ.மா.ராமசந்திரன் பிறந்தநாளுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்து..!