×
 

அய்யோ அண்ணா.. நூலிழையில் உயிர் தப்பிய ஆ.ராசா.. பகீர் சம்பவம்..!

மயிலாடுதுறையில் நடந்த கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த போது மின்கம்பம் சாய்ந்ததில் நூலிழையில் திமுக எம்பி ஆ.ராசா உயிர்தப்பினார்.

தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் அதிகளவில் இருந்து வருகிறது. சில மாவட்டங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெயில் கொளுத்தி வருகிறது. இதனால், மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில், இன்று பிற்பகல் பிறகு திடீரென வானிலை மாறி ஆங்காங்கே சூறைக்காற்றுடன் கூடிய மழை பொழிவு இருந்தது.

இதனிடயே, மயிலாடுதுறையில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் திமுக சார்பில் நடைபெற்று வந்த நிலையில் அதில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ ராசா பேசிக் கொண்டிருந்தார். 

அப்போது பலத்த காற்று வீசியதால் மேடையின் அருகே பொருத்தப்பட்டிருந்த மின்விளக்குகள் சாய்ந்து ஆ ராசா பேசிக் கொண்டிருந்த மைக் மீது விழுந்தது இதில் ஆ ராசா உயிர் தப்பினார்.

இதையும் படிங்க: மரண அடி.. பாகிஸ்தானின் முதுகெலும்பை உடைத்தது இந்தியா.. பாக்லிஹார் அணை நீர் நிறுத்தம்..!

இதை அடுத்து உடனடியாக பேச்சை நிறுத்திய ஆ ராசா அங்கே இருந்து அவசர, அவசரமாக புறப்பட்டு சென்றார்.

இதையும் படிங்க: பாகிஸ்தான் தோற்று போன ஒரு நாடு.. பாக்.கை டாராக கிழித்து தொங்கவிட்ட ஓவைசி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share