×
 

சாதி, மத கண்ணோட்டத்தில் நீதிபதிகள்..! இன்பீச்மென்ட் கொண்டு வர முடியுமா? திமுக சவால்..!

அரசியல் சட்டத்தையும் நீதியின் மாண்பையும் மீறி மதவாத கண்ணோட்டத்துடன் செயல்படுகின்ற நீதிபதிகள் மீது இன்பீச்மென்ட் நடவடிக்கை கொண்டு வர பாஜக அரசு நடவடிக்கை எடுக்குமா என திமுக கேள்வி எழுப்பி உள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையைச் சேர்ந்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீது அவமதிப்பு குற்றம் சுமத்தி அச்சுறுத்தும் வகையில் நீதிபதி ஜி.ஆர்.விஸ்வநாதன் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வழக்கறிஞர் வாஞ்சிநாதன், நீதிபதி ஜி ஆர் விஸ்வநாதன் மீது 14 பக்கங்களை கொண்ட புகார் ஒன்றை அனுப்பியதாகவும், இதனால் ஆத்திரப்பட்டு அவர் மீது அவமதிப்பு குற்றம் சுமத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

சாதி, மதம் பார்த்து தீர்ப்பு வழங்குகிறார் என்றும் சராசரி நபர்களை சாதி, மதம் சார்ந்த நிகழ்ச்சிகளில் நிலையெடுத்து பேசுகிறார் என்றும் குற்றம் சுமத்தப்பட்டதற்கு நீதிபதி ஜி.ஆர்.விஸ்வநாதன் பழிவாங்கலை மேற்கொண்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி உள்ள திமுக கடும் விமர்சனங்களை முன் வைத்துள்ளது.  கன்றை இழந்த பசுவுக்கும், கணவனை இழந்த கண்ணகிக்கும் நீதி சொன்ன மன்னர்கள் வாழ்ந்த பெருமைமிக்க தமிழ்நாட்டில், வெறும் சாதி, மத கண்ணோட்டத்துடன் செயல்படும் நீதிபதிகளின் போக்கை ஓய்வு பெற்ற நீதியரசர்களே கடுமையாக கண்டித்திருக்கும் நிலையை பார்க்க முடிவதாக சுட்டிக்காட்டி உள்ளது.

இதையும் படிங்க: “அந்த கவலை உங்களுக்கு வேண்டாம்” - விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு அதிமுக வளர்மதி பதிலடி...!

இந்தியாவில் தனி நபர்கள், அரசியல் கட்சிகள், ஆட்சியாளர்கள் இவர்கள் எல்லோரையும் விட உயர்ந்தது அரசியலமைப்புச் சட்டம் தான் என்றும் அந்த சட்டத்தின் வழி நின்று நீதி வழங்க வேண்டிய ஒரு நீதிபதி, வேத மரபை உயர்த்தி பிடித்து ஜாதி கண்ணோட்டத்துடன் செயல்பட்டு நீதி பெற்றதை பச்சையாக ஒப்புக்கொண்டு பெருமை அடிப்பதும் அவமானம் என்று கூறியுள்ளது.

வர்ணாசிரம சாதி ஆதிக்க மனோநிலையின் அடிப்படையில் நீதிமன்றத்தில் வாதாடுகின்ற வழக்கறிஞர்களை நோக்கி கேள்வி எழுப்பி கருத்து தெரிவிப்பதும், ஜால்ரா தட்டுவதும் இந்தியாவின் நீதித்துறைக்கு பெருத்த அவமானம் என்றும் குற்றம்சாட்டி உள்ளது. எனவே, இந்த அவமானத்தை துடைத்தெறியும் வகையில், அரசியல் சட்டத்தையும் நீதியின் மாண்பையும் மீறி மதவாத கண்ணோட்டத்துடன் செயல்படுகின்ற நீதிபதிகள் மீது இன்பீச்மென்ட் நடவடிக்கை கொண்டு வருவதே நியாயமானதாக அமையும் என்று கூறியுள்ள திமுக, மத்திய பாஜக அரசு அதை செய்யுமா என கேள்வி எழுப்பி உள்ளது.

இதையும் படிங்க: தரவேண்டிய நிதியை வழங்க ரெடியா? பிரதமர் கிட்ட பதில் இருக்கா? திமுக சரமாரி கேள்வி

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share