ரூ.8000 கூப்பன் மாதிரி..! தவெக - திமுகவினர் இடையே கைகலப்பு..! கும்பகோணத்தில் பரபரப்பு..!!
கும்பகோணத்தில் திமுகவினர் மற்றும் தவெகவினர் இடையே கைகலப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடக்கிறது. இதற்காக தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தங்கள் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களுக்குச் சென்று தங்கள் சின்னத்தை அடையாளப்படுத்தி வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். தங்கள் கட்சி சார்பில் கொடுத்துள்ள வாக்குறுதிகளை முன்னிறுத்தி தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில், தி.மு.க தேர்தல் அறிக்கையில், இல்லத்தரசிகளுக்கு ரூ.8,000 மதிப்புள்ள கூப்பன் வழங்கி, அதன் மூலம் டிவி, பிரிட்ஜ், மிக்ஸி, கிரைண்டர், வாஷிங் மெஷின் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்களைத் தங்கள் விருப்பப்படி வாங்கிக்கொள்ளலாம் என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.
இந்தத் திட்டம், தி.மு.கவின் பிரசாரத்தின் முக்கிய அம்சமாக மாறியது. கட்சியினர் பல இடங்களில் இந்தக் கூப்பன்களை மாதிரியாக விநியோகித்து, “தி.மு.க வெற்றி பெற்றால் ஸ்டாலின் முதல்வராகி இந்தக் கூப்பன்களைப் பயன்படுத்தி பொருட்கள் வாங்கலாம்” என்று விளக்கி வாக்கு கேட்டு வந்தனர்.
இதையும் படிங்க: பிரதமருக்கே எச்சரிக்கை விடுப்பது சரியா..? முதல்வரை சாடிய அண்ணாமலை..!!
கும்பகோணம் பகுதியில் இத்தகைய பிரசாரத்தின்போது தி.மு.கவினர் மாதிரி கூப்பன்களை வழங்கியபோது, அங்கு த.வெ.கவினர் தலையிட்டனர். கூப்பன் வழங்குவதைத் தடுக்க முயன்ற அவர்களுக்கும் தி.மு.கவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது படிப்படியாக தள்ளுமுள்ளு, மோதலாக மாறியது. போலீசார் முன்னிலையிலே இரு தரப்பினரும் அடித்துக் கொள்ள பாய்ந்ததால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
இதையும் படிங்க: முதல்வர் சாப்பிடும் இட்லிக்கு சட்னியா..? சாம்பாரா..? இதுதான் சரிபார்ப்பு தள நிலைமை..! விளாசிய அண்ணாமலை..!!