×
 

கோவை மீது வெறுப்பை கொட்டும் திமுக... தோல்வி தான் பரிசு..! MLA வானதி சீனிவாசன் கண்டனம்..!

செந்தில் பாலாஜி, தயாநிதி மாறன் மன்னிப்பு கேட்க வேண்டும் என வானதி சீனிவாசன் வலியுறுத்தி உள்ளார்.

கரூரில் நடைபெற்ற திமுக கூட்டத்தில், கோவை மக்கள் தங்கள் ஊரைத் தவிர மற்ற எல்லா ஊர்களையும் கெடுப்பார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் பேசிய வீடியோக்கள் பரவின. கோவை மக்களை மலிவாக பேசிய தயாநிதி மாறனும், அந்த இழிபேச்சை மேடையில் சிரித்து ரசித்த செந்தில் பாலாஜியும் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என MLA வானதி சீனிவாசன் வலியுறுத்தி உள்ளார்.

திமுக கட்சி நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் கோவை மக்களைக் குறித்து மலினமாகப் பேசியிருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது என்று கூறினார். பாசத்திற்கும் பண்புக்கும் பேர் பெற்று, பொருளாதார வளர்ச்சியில் உச்சங்கொண்டு, தேடி வருவோரையெல்லாம் வாழ வைக்கும் தமிழகத்தின் தலைசிறந்த தொழில் நகரத்தைக் கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல், வாய்க்கு வந்தபடி மலினமாகப் பேசி சிரிப்பதை என்றும் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் தெரிவித்தார். 

கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் என்பதைத் தாண்டி, கோவை மண்ணின் மகளாகச் சொல்கிறேன்! கோவை மக்களை இழிவாகப் பேசிய தயாநிதி மாறன், அந்த கொச்சைப் பேச்சை மேடையில் இருந்தபடியே சிரித்து வெகுவாக இரசித்த செந்தில் பாலாஜி ஆகிய இருவரும் உடனடியாக கோவை மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: பிப்.23 முதல் வெல்லும் தமிழ் பெண்கள் பரப்புரை...! இதையெல்லாம் செய்யுங்க...முதல்வர் ஸ்டாலின் ஆணை..!

ஆதிகாலந்தொட்டே மாற்றாந்தாய் மனப்பான்மை கொண்டு, கோவை மீது வெறுப்பை உமிழ்ந்து வரும் திமுகவிற்கு, வரும் தேர்தலில் மிகப்பெரும் தோல்வியைப் பரிசளிப்பார்கள் கோவை மக்கள் என்றும் அப்போது தெரியும் கோவை மக்களின் அருமை எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: மாற்றுத்திறனாளிகளை ஒடுக்குவது சர்வாதிகாரப் போக்கு...! திமுகவை கண்டித்த TTV தினகரன்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share