×
 

ரூ.7 கோடியில் நாய்களைப் பராமரிக்க காப்பகங்கள்... சென்னை மாநகராட்சியின் புதிய அறிவிப்பு...!

நாய்கள் பராமரிப்புக்காக 2 புதிய மையங்கள் உருவாக்கப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தெரு நாய்களை காப்பகங்களில் வைக்கும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பிறகு தீர்ப்பு திருத்தி அமைக்கப்பட்ட நிலையில் கூட தெருநாய்கள் தேவையா இல்லையா என்று வாதங்கள் நடந்து வருகிறது. தெரு நாய்கள் வேண்டாம் என்பவர்கள் பொதுவாக முன் வைக்கும் கருத்து என்னவென்றால், மனித உயிர்களுக்கு ஆபத்து ஏற்படுகிறது என்பதுதான். இருப்பினும் தெருநாய்கள் எல்லாமே அப்படி கிடையாது என்றும் ஒரு பக்கம் கூறி வருகின்றனர்.

தெரு நாய்களை ஒழிப்பது தங்கள் நோக்கம் அல்ல இருப்பினும் மனித உயிர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதே பொதுவான கோரிக்கையாக உள்ளது. தெரு நாய்கள் தங்களுக்கு பாதுகாப்பு என்று ஒரு தரப்பினரும் தெரு நாய்களால் வெளியில் வரவே முடியவில்லை என்று மற்றொரு தரப்பினரும் வாதிட்டு வருகின்றனர். நாய் கடிகளால் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயமும் இருந்து வருகிறது.

தெரு நாய்கள் மட்டுமின்றி வளர்ப்பு நாய்களே ஆக்ரோஷமாக மாறி கடிக்கும் சம்பவங்களும் அரங்கேறுகின்றன. இப்படி தெருநாய்கள் பிரச்சனை போய்க்கொண்டிருக்கும் சூழ்நிலையில், சென்னையில் நாய்கள் பராமரிப்புக்காக ரூ.7.67 கோடியில் 2 இடங்களில் புதிய மையங்களை உருவாக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

இதையும் படிங்க: எல்லாம் அவங்களுக்காக தான்! தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளையும் விலையில்லா உணவு! தமிழக அரசு நிதி ஒதுக்கீடு

சென்னை வேளச்சேரி, மாதவரம் பகுதிகளில் தெரு நாய்கள் பராமரிப்பு மையங்களை அமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. ரேபிஸ் பாதிப்பு, ஆக்கிரமிப்பு குணம் கொண்ட நாய்களை மையங்களில் அடைத்து பராமரிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. பராமரிப்பு மையங்களில் 500 நாய்களை பராமரிக்க நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: நாங்க செத்தா முதலமைச்சர் தான் காரணம்... கதறி துடிக்கும் தூய்மை பணியாளர்கள்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share