எல்லாம் அவங்களுக்காக தான்! தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளையும் விலையில்லா உணவு! தமிழக அரசு நிதி ஒதுக்கீடு
சென்னையில் தூய்மை பணியாளர்களுக்கு மூன்று வேளையும் விலையில்லா உணவு வழங்கும் திட்டத்திற்காக டெண்டர் கோரப்பட்டுள்ளது.
பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் போராடினர். பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதாக கூறி அவர்களை நீதிமன்ற உத்தரவுபடி அப்புறப்படுத்தினர். தொடர்ந்து அவர்களுக்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தது. காப்பீடு தொகை அதிகரிப்பு, காலை உணவு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும் தூய்மை பணியாளர்கள் பணி நிரந்தரத்தை வலியுறுத்தியும் தூய்மையைப் பணிகளை தனியார் நிறுவனங்களுக்கு ஒப்படைப்பதை எதிர்த்தும் போராடினர்.
நேற்று மெரினா கடற்கரையில் போராட குவிந்த தூய்மை பணியாளர்களை உடனடியாக போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் தூய்மை பணியாளர்களுக்கு மூன்று வேளையும் உணவு வழங்கும் திட்டத்திற்காக தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. சென்னை மாநகரத்தில் தூய்மை பணியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு மூன்று வேளையும் விலையில்லா உணவு வழங்குவதற்காக தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
தினமும் பத்தாயிரம் தூய்மை பணியாளர்களுக்கு விலையில்லா உணவு வழங்கும் நோக்கத்தில் ஒரு கோடியே 87 லட்ச ரூபாய் தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. இந்த இலவச உணவு திட்டம் அடுத்து மூன்று ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக உணவு தயாரித்து வழங்கும் நிறுவனங்களை தேர்வு செய்ய சென்னை மாநகராட்சி சார்பில் டெண்டர் கோரப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நாங்க செத்தா முதலமைச்சர் தான் காரணம்... கதறி துடிக்கும் தூய்மை பணியாளர்கள்!
தூய்மை பணியாளர்கள் பெரும்பாலும் அதிகாலை நேரத்திலேயே தங்கள் பணி தொடங்கும் நிலையில் இதனால் சரியான நேரத்தில் உணவு உட்கொள்ள முடியாமல் போவதாக கூறப்பட்டுள்ளது. எனவே அவர்களுக்கு தினசரி உணவு வழங்குவது மற்றும் உடல் நலத்தை பாதுகாப்பது உள்ளட்ட நோக்கத்திற்காக இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மீண்டும் ஓர் மெரினா புரட்சியா? தூய்மை பணியாளர்களை தேடித் தேடி கைது செய்யும் போலீஸ்…