×
 

திராவிட பொங்கல் திருவிழா... மாநில அளவில் விளையாட்டுப் போட்டிகள்... முதல்வர் ஸ்டாலின் உத்தரவு...!

திராவிட பொங்கல் திருவிழாவை ஒட்டி விளையாட்டு போட்டிகள் நடத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் 2026-ஆம் ஆண்டு கொண்டாடப்படும் திராவிடப் பொங்கல் திருவிழா, தமிழர்களின் பாரம்பரிய அறுவடைத் திருநாளான பொங்கலை சமூகநீதி, சமத்துவம் மற்றும் திராவிடக் கொள்கைகளின் கொண்டாட்டமாக மாற்றும் ஒரு மாபெரும் முயற்சியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின், 2025-இன் இறுதியில் கழக உடன்பிறப்புகளுக்கு எழுதிய புத்தாண்டு வாழ்த்து மடலில் இந்த விழாவைப் பற்றி விரிவாகக் குறிப்பிட்டுள்ளார். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் வழியில் தமிழரின் பண்பாட்டு அடையாளமாக விளங்கும் பொங்கல் திருநாளை, கழகத்தின் சார்பில் 'திராவிடப் பொங்கல்' என்ற பெயரில் சமூகநீதிக்கான கொண்டாட்டமாக முன்னெடுக்க வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தத் திருவிழா, 2026-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே தமிழ்நாடு முழுவதும் ஊர்தோறும் சிறப்பாக நடத்தப்பட வேண்டும் என்பது கழகத்தின் திட்டம். புத்தாண்டு பிறந்தவுடன் ஜனவரி மாதம் முழுவதும் இந்தக் கொண்டாட்டங்கள் நீளும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளன. குறிப்பாக, திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் எடுத்துச் செல்லும் விதமாகவும், அனைத்துத் தமிழர்களும் பங்கேற்கும் வகையிலும் கலை, இலக்கியம், விளையாட்டுப் போட்டிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்று முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: சம வேலைக்கு சம ஊதியம்... இடைநிலை ஆசிரியர்கள் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு... போராட்டம் தொடரும் என திட்டவட்டம்...!

திராவிடப் பொங்கல் திருவிழாவில் மாநிலம் முழுவதும் 3 கட்டங்களாக விளையாட்டுப் போட்டிகளை நடத்த வேண்டும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார். ஒன்றிய அளவில் போட்டிகளை முடித்து, வரும் ஜனவரி 10ம் தேதி முதல் பொங்கல் வரை மாவட்ட அளவில் போட்டிகளை நடத்த வேண்டும் என் அறிவுறுத்தி உள்ளார். போட்டிகளில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள அணிகள் www.diravidapongal.in என்கிற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: பழைய ஓய்வூதியம்..! அரசு ஊழியர்களின் கோரிக்கை... அமைச்சர்கள் முக்கிய ஆலோசனை...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share