பழைய ஓய்வூதியம்..! அரசு ஊழியர்களின் கோரிக்கை... அமைச்சர்கள் முக்கிய ஆலோசனை...!
பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக அமைச்சர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கை தொடர்பாக அமைச்சர்கள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். 2021ஆம் ஆண்டு தேர்தலின் போது ஆட்சிக்கு வந்தால் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என திமுக அரசு வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால் நான்கு ஆண்டுகளாகியும் அது குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை என்றும்
நிதிநிலை அறிக்கையில் கூட பழைய ஓய்வூதிய திட்டம் பற்றிய அறிவிப்பு அவர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது. ஏற்கனவே பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக தமிழக அரசு ஊழியர்கள் சங்கங்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில் பட்ஜெட்டில் கூட எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இதை அடுத்து அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்த வேண்டும் என்ற தொடர்ந்து கோரிக்கையை வைத்து வருகின்றனர். இது தொடர்பாக ஆலோசனை நடத்தி நல்ல முடிவை அரசு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். தற்போது இடைநிலை ஆசிரியர்களும் சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு போராடி வருகின்றனர்.
இதையும் படிங்க: என்னது கஞ்சா நடமாட்டம் இல்லையா? முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் மா. சு..! விளாசிய இபிஎஸ்...!
இந்த நிலையில், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கோரிக்கை தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தலைமைச் செயலாளர், நிதி செயலாளர் ஆகியோர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக ஆய்வறிக்கு சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் அரசு ஊழியர்கள் கோரிக்கை தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: மீண்டும் 2.0 திராவிட மாடல்தான்... இளைஞரணிக்கு அதிமுக்கியத்துவம்... அதகளப்படுத்தும் திமுக...!