×
 

ஹைஅலர்ட்டில் ஊட்டி... நாளை முதல் இந்த சுற்றுலா தளங்களை மூட உத்தரவு...! 

கனமழை எச்சரிக்கையை அடுத்து உதகை அருகே உள்ள பைக்காராப் படகு இல்லமும் நாளை 25.05.25 மூடபடும் என சுற்றுலாத்துறை அறிவிப்பு .

நீலகிரியில் கனமழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ள நிலையில் உதகையில் நாளை பல்வேறு சுற்றுலாத் தளங்களை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழைக்கு உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய 4 தாலுகாக்கள் பாதிக்கப்படும் என்றும் மழை பாதிப்புகளை கண்காணிக்க 42 குழுக்கள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. உள்ளூர் மக்களும், சுற்றுலா பயணிகளும் மின்கம்பிகள், மின்கம்பங்களுக்கு அருகே செல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

 

மேலும் நிலச்சரிவு அபாயகரமான இடங்களில் உள்ள பொதுமக்கள் நிவாரண முகாம்களுக்கு வந்து தங்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பபட்டுள்ளது. ரெட் அலர்ட் எச்சரிக்கை இருப்பதால் 3 நாட்களுக்கு டிரக் தமிழ்நாடு திட்டத்தின் மூலம் நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகள் மலையற்ற செல்ல தடை விடுக்கப்படும் என்றும் உதகை வடகிழக்கில் இன்று காலை முதலே படகு சவாரி நிறுத்தப்பட்டது போல நாளை மற்றும் நாளை மறுநாளும் ரத்து செய்ய இருப்பதாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஊட்டி மலர் கண்காட்சியை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்.. வழியெங்கும் மக்கள் உற்சாக வரவேற்பு..!

இதனிடையே அதிக கன மழை எச்சரிக்கை காரணமாக வன துறை கட்டுபாட்டில் செயல்பட்டு வரும் தொட்டபெட்டா காட்சி முனை மற்றும் கூடலூர் சாலையில் உள்ள பயின் மரக்காடுகள் ஆகிய இரண்டு சுற்றுலா தளங்களும் நாளை ஒருநாள் மூடப்படுவதாக நீலகிரி மாவட்ட வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.  நீலகிரி மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையாக ஏற்கனவே உதகை படகு இல்லம் இரண்டு நாட்களுக்கு  மூடப்படும் எனவும் அதேபோல் தொட்டபெட்டா மலைச்சிகரம் மற்றும் பைன் பாரஸ்ட் , அவலாஞ்சி உள்ளிட்ட வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலாத்தலங்கள் நாளை ஒரு நாள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டது .

 தற்போது உதகை அருகே உள்ள பைக்காரா படகு இல்லமும்  நாளை (25.05.25) ஒரு நாள் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி மூடப்படுவதாக சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது. அதேபோல் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள  அவலாஞ்சி சுற்றுலா தலம் நாளை (25.05.25) ஒருநாள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: உதகை மருத்துவமனைக்கு திடீர் விசிட்.. நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்த முதல்வர்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share