×
 

தலைக்கு தில்ல பார்த்தியா? - போலீசிடமே தொக்காக சிக்கிய போலி எஸ்.ஐ... வாகன சோதனையில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்..!

ஏர் துப்பாக்கியுடன் வலம் வந்த போலி எஸ்.ஐ காவல்த்துறையினர் கைது செய்து சிறையிலடைப்பு

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி பகுதியில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் புலக்கத்தில் உள்ளதாக வந்த தகவலை அடுத்து, மணமேல்குடி காவல்த்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். கீழ மாந்தாங்குடி அருகே சோதனை நடைபெற்றுக் கொண்டிருக்கையில் அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த அதே பகுதியை சேர்ந்த பிரித்திவிராஜ் (26) என்பவரை விசாரித்துள்ளனர்.

அப்போது பிரித்திவிராஜ் தான் புதுக்கோட்டை கைரேகை பதிவு போலீஸ் என  முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். அதனை தொடர்ந்து சந்தேகமடைந்த காவல்த்துறையினர் அவரது அடையாள அட்டையை வாங்கி பார்த்துள்ளனர். அந்த அட்டை போலியானது என்று தெரிய வந்ததையடுத்து,இரு சக்கர வாகனத்தை சோதனை செய்துள்ளனர்.

அப்போது வாகனத்தில் 1 கிலோ 250 கிராம் கஞ்சா மற்றும் ஏர் துப்பாக்கி ஆகியவை இருந்தது தெரியவந்துள்ளது. அதனை அடுத்து அவரை கைது செய்த காவல்த்துறையினர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்பு சிறையிலடைத்தனர். காவல்த்துணை ஆய்வாளர் என கூறி ஏர்துப்பாக்கியுடன் வலம் வந்த போலி எஸ்ஐ கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: #BREAKING: செங்கோட்டையன் ஆதரவாளர்களின் கட்சி பதவியும் பறிப்பு… அதிரடி காட்டிய இபிஎஸ்

இதையும் படிங்க: #BREAKING: அதிமுக பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையன் நீக்கம்... இபிஎஸ் அதிரடி அறிவிப்பு

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share