×
 

₹40,000 கோடி வங்கி மோசடி: ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் முன்னாள் தலைவர் புனித் கார்க் கைது!

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தில் நடைபெற்ற ₹40,185 கோடி வங்கி மோசடி வழக்கில், அந்த நிறுவனத்தின் முன்னாள் தலைவர் புனித் கார்க்கை அமலாக்கத்துறை  கைது செய்துள்ளது.

அனில் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தில் நடைபெற்ற ₹40,000 கோடிக்கும் அதிகமான வங்கி மோசடி மற்றும் பணமோசடி வழக்கில், அந்த நிறுவனத்தின் முன்னாள் தலைவரும் இயக்குநருமான புனித் கார்க்கை அமலாக்கத்துறை இன்று கைது செய்துள்ளது. 

கடந்த 2025-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிபிஐ பதிவு செய்த எப்ஐஆர்-ன் அடிப்படையில் இந்த விசாரணை தொடங்கப்பட்டது. 2001 முதல் 2025 வரை ரிலையன்ஸ் குழுமத்தில் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்த புனித் கார்க், வங்கி நிதியைத் திசைதிருப்பியதில் முக்கியப் பங்காற்றியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

வங்கிகளிடமிருந்து கடன் வாங்கப்பட்ட பொதுப்பணத்தைச் சுமார் ₹13,600 கோடி அளவுக்கு  கடன்களுக்காகவும், ₹12,600 கோடிக்கும் மேலாகத் தொடர்புடைய இதர நிறுவனங்களுக்கும் சட்டவிரோதமாக மறித்துவிட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. நியூயார்க்கின் மேன்ஹாட்டனில் ₹70 கோடி ($8.3 மில்லியன்) மதிப்பிலான சொகுசு அடுக்குமாடி குடியிருப்பை வாங்கியதோடு, அதனைத் தற்காலிகத் தீர்வாணையத்தின் (CIRP) அனுமதியின்றித் துபாயைச் சேர்ந்த ஒரு நிறுவனத்தின் மூலம் ரகசியமாக விற்றுப் பணத்தைச் சுருட்டியது கண்டறியப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஊழியர் வீட்ல நடந்த சோதனை! தேவையில்லாமல் CMC பெயரை இழுக்க வேண்டாம் என நிர்வாகம் வேண்டுகோள்!

வங்கிகளிடமிருந்து பெறப்பட்ட கடன் தொகையைப் புனித் கார்க் தனது குழந்தைகளின் வெளிநாட்டுக் கல்விச் செலவிற்காகப் பயன்படுத்தியதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. முன்னதாக, புனித் கார்க்கின் மனைவியின் பெயரில் இருந்த பங்குகள் மற்றும் பரஸ்பர நிதி உள்ளிட்ட சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியிருந்தது. ரிலையன்ஸ் அனில் அம்பானி குழுமத்தின் கீழ் செயல்படும் ஆர்.காம், ஆர்.எச்.எப்.எல் உள்ளிட்ட நிறுவனங்கள் சுமார் ₹40,185 கோடி வரை நிலுவை வைத்துள்ள சூழலில், இந்தக் கைது நடவடிக்கை அந்தத் தொழில் குழுமத்திற்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

இதையும் படிங்க: #BREAKING: மருந்து கொள்முதலில் முறைகேடா? வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share