மக்களையும், விவசாயிகளையும் நோகடிக்காதீங்க.. RBI விதிகளுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்..!
தங்கநகை அடமானங்களுக்கு ரிசர்வ் வங்கி விதித்துள்ள கட்டுப்பாடுகளுக்கு எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
அடமானம் வைத்திருக்கும் தங்கத்தை முழுவதும் மீட்டப் பிறகு தான், மீண்டும் அந்த நகைகளை அடமானம் வைக்க முடியும் என்றும் தங்க நகைகளை மீட்காமல் அப்படியே அடமானக் காலத்தை நீட்டிக்க முடியாது என்றும் கடந்த மாதம் ரிசர்வ் வங்கி அறிவித்தது மக்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்த நிலையில், தங்க நகை அடமானக் கடனில் மீண்டும் புதிய 9 விதிமுறைகளை ரிசர்வ் வங்கி முன்வைத்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் அடுத்த அடுத்த திடீர் அறிவிப்புகளுக்கு எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார். வங்கிகளில் வைக்கப்படும் நகை அடமான கடனுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய நிபந்தனைகளை ரிசர்வ் வங்கி திரும்பப் பெற வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: வலுவான ஆதாரம் இருந்ததால் தான் நீதி கிடைத்தது..! திமுக, அதிமுகவை வெளுத்து வாங்கிய திருமா..!
ரிசர்வ் வங்கியின் புதிய நிபந்தனைகளால் வங்கிகளில் கடன் வாங்கும் ஏழை எளிய நடுத்தர மக்கள் மற்றும் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்றும் தனியார் நகைக் கடைகளில் வாங்கப்பட்ட தங்க காசுகளின் தரத்தை பரிசோதித்து நகை கடன் வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: அதிமுக ஆட்சியில் வியாபாரிகளின் கோரிக்கை நிச்சயம் நிறைவேற்றப்படும்.. இபிஎஸ் நம்பிக்கை..!