சிங்கப்பெண் அதிரடி படை... முறையான அதிகாரம் இல்லை... EPS சரமாரி குற்றச்சாட்டு..!!
சட்டப்பேரவையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.
ஆகஸ்ட் 5ஆம் தேதி தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடரின் தொடர்ச்சியாக மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இதுவரை பல துறைகளின் மானியக் கோரிக்கைகள் விவாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை ஆகியவற்றின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது.
மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சட்டமன்ற உறுப்பினர்களின் கோரிக்கை மற்றும் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். 110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் விஜய் என்று அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக வலியுறுத்தி அரசினர் தனி தீர்மானம் கொண்டுவரப்பட்டது. பல்வேறு அரசியல் கட்சியினரின் ஆதரவோடு தீர்மானம் நிறைவேறியது.
இதைத்தொடர்ந்து சட்டம் ஒழுங்கு தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் பேசினார். அமைச்சர்கள் அதற்கு பதில் அளித்து பேசினார். பிறகு, சட்டப்பேரவையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார். அப்போது சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கும் முறையான அதிகாரம் வழங்கப்படவில்லை என்று குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: “அதை கேட்க வக்கில்லை...” - அதிமுகவை விளாசிய மாணிக்கம் தாகூர்... எம்.எல்.ஏ. கனிமொழிக்கு கொடுத்த கமெண்ட் தான் ஹைலைட்டே...!
தமிழகத்தில் முதியவர்கள் தனியாக வசிக்கும் இடங்களில் கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருவதாக குறிப்பிட்டார். தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்திருப்பதாக எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார். சேலத்தில் உள்ள தனது தோட்டத்தில் இருந்த மின்மோட்டாரின் வயர்களை திருடி சென்றிருப்பதாகவும் கூறினார். தமிழ்நாட்டில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களின் விற்பனை அதிகரித்திருப்பதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஜல்லிக்கட்டு பேச்சால் சர்ச்சையில் சிக்கிய தவெக MLA..! போராட்டத்தில் களமிறங்கிய அதிமுக..!!