×
 

வந்தாச்சு தேர்தல் திருவிழா... EVM இயந்திரங்களில் வேட்பாளர்கள் பெயர், சின்னம் பொருத்தும் பணி தீவிரம்..!!

EVM இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் பொருத்தும் பணிகள் தீவிரமடைந்துள்ளது.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை ஒட்டி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னங்களைப் பொருத்தும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. இந்தியத் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, ஏப்ரல் 23 அன்று நடைபெறவுள்ள ஒரே கட்ட தேர்தலுக்கான தயாரிப்புகள் முழு வேகத்தில் உள்ளன.

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்தபடி, இன்று முதல் இந்த முக்கியப் பணி தொடங்கியுள்ளது. இது தேர்தல் நடைமுறையின் நம்பகத்தன்மையை உறுதி செய்யும் ஒரு அடிப்படை நடவடிக்கையாகும். தேர்தல் செயல்முறைக்கு முன்னதாக, வேட்புமனு தாக்கல், பரிசீலனை மற்றும் வேட்பாளர்கள் பட்டியல் இறுதி செய்யப்படுகிறது.

ஏப்ரல் 9 வரை வேட்பாளர்கள் வாபஸ் பெறும் காலக்கெடு முடிந்த பிறகு, இறுதி வேட்பாளர்கள் பட்டியல் தயாராகிறது. இந்தப் பட்டியலின் அடிப்படையில் தான் EVM இயந்திரங்களில் வேட்பாளர்களின் விவரங்கள் பதிவேற்றப்படுகின்றன. ஒவ்வொரு தொகுதிக்கும் தனித்தனியாக இந்தப் பணி மேற்கொள்ளப்படுகிறது. பொதுவாக, அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநிலக் கட்சிகளின் வேட்பாளர்கள் முதலில், பின்னர் பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என்ற வரிசையில் பெயர்கள் அமைக்கப்படுகின்றன.

இதையும் படிங்க: வாக்குப்பதிவு நடக்கும் இடங்கள் ட்ரோன் மூலம் கண்காணிப்பு..! தேர்தல் ஆணையம் திட்டம்

EVM இயந்திரம் பாலட் யூனிட், கண்ட்ரோல் யூனிட் மற்றும் வாக்காளர் வாக்கை உறுதி செய்யும் VVPAT ஆகியவற்றைக் கொண்டது. பாலட் யூனிட்டில் வேட்பாளர்களின் பெயர், தொடர் எண், புகைப்படம் மற்றும் சின்னம் ஆகியவை அடங்கிய லேபிள் பொருத்தப்படுகிறது. 

இதையும் படிங்க: #BREAKING: உள்துறைச் செயலாளர் மாற்றம்..! அடுத்தடுத்து அதிரடி காட்டும் தேர்தல் ஆணையம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share