×
 

சட்டமன்றத் தேர்தல் 2026: 5 மாநில அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் அவசர அழைப்பு!

“பிப்ரவரி 4, 5-ல் டெல்லியில் முக்கிய ஆலோசனை” - கூட்டத்தைப் புறக்கணிக்கும் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை பாயும் என எச்சரிக்கை!

தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் விரைவில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கானத் தயார் நிலை குறித்து ஆலோசிக்க, இந்தியத் தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, புதுச்சேரி மற்றும் அஸ்ஸாம் ஆகிய 5 மாநிலங்களின் தலைமைத் தேர்தல் அதிகாரிகள் மற்றும் முக்கியத் துறை அதிகாரிகளுக்குத் தேர்தல் ஆணையம் முறைப்படி அழைப்பு விடுத்துள்ளது. வரும் பிப்ரவரி 4 மற்றும் 5-ஆம் தேதிகளில் புது தில்லியில் உள்ள தேர்தல் ஆணைய தலைமையகத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

தேர்தலுக்காகச் செய்யப்பட வேண்டிய அடிப்படை வசதிகள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் இருப்பு, வாக்குச்சாவடி பாதுகாப்பு மற்றும் பதற்றமானப் பகுதிகளைக் கண்டறிதல் உள்ளிட்ட பல்வேறு முக்கியக் கோணங்களில் விவாதிக்கப்பட உள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கூட்டத்தில் பங்கேற்கத் தவறும் அல்லது அலட்சியம் காட்டும் அதிகாரிகள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தேர்தல் ஆணையம் முன்னெச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையும் படிங்க: “எடப்பாடியாரை முதலமைச்சராக ஏற்போரை இருகரம் கூப்பி வரவேற்போம்!” - ஆர்.பி. உதயகுமார் அதிரடி!

தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், கடந்த சில நாட்களாகவே வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு மற்றும் வாக்குச்சாவடி மறுசீரமைப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. டெல்லியில் நடைபெறும் இந்த இரண்டு நாள் ஆலோசனைக் கூட்டத்தைத் தொடர்ந்து, பிப்ரவரி மாத இறுதியில் தேர்தல் ஆணையத்தின் உயர்மட்டக் குழு தமிழகம் வந்து நேரடியாக ஆய்வு நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மார்ச் மாதத் தொடக்கத்தில் தேர்தல் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்பதால், தற்போதே தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது.

இதையும் படிங்க: “டெல்லியில் ராகுல் காந்தி - கனிமொழி சந்திப்பு!” - 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு தீவிரம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share