பிரச்சாரம் ஓய்ந்தும் வாக்குச் சேகரிப்பு..! சீமான் மீது புகார்..! வழக்குப்பதிவு..!
பிரச்சார நேரம் ஓய்ந்தும் கடந்து வாக்கு சேகரித்ததாக சீமான் மீது புகார் எழுந்துள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-இன் பிரச்சாரம் நேற்று மாலை 6 மணியுடன் முடிவுக்கு வந்த நிலையில், 48 மணி நேர அமைதிக் காலம் (silence period) தொடங்கியுள்ளது. இந்த அமைதிக் காலத்தில் பொது கூட்டங்கள், பரப்புரை, அரசியல் விளம்பரங்கள் உள்ளிட்ட அனைத்து வகையான தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளும் தடை செய்யப்பட்டுள்ளன.
இந்த விதிமுறைகளை மீறியதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது புகார் எழுந்துள்ள சம்பவம் தேர்தல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி, பிரச்சாரம் மாலை 6 நாம்மணிக்கு முடிவடைந்த பின்னர் எந்தவிதமான பரப்புரையும் அனுமதிக்கப்படாது. இந்தக் காலகட்டத்தில் சமூக ஊடகங்கள் உட்பட எந்த தளத்திலும் தேர்தல் தொடர்பான உள்ளடக்கங்களைப் பகிர்வது தடை செய்யப்பட்டுள்ளது.
ஆனால், சில இடங்களில் இந்த விதிமுறைகளை மீறி பிரச்சாரம் தொடர்ந்ததாகக் கூறப்படும் புகார்கள் வந்துள்ளன. அத்தகைய ஒரு சம்பவத்தில் சீமான் ஈடுபட்டதாகக் கூறி, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அல்லது உள்ளூர் போலீசார் புகார் அளித்துள்ளனர்.இதுபோன்ற நேரம் மீறல் புகார்கள் சீமான் மீது முன்பும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: கொளத்தூர் தொகுதி என் செல்லக் குழந்தை..! மீண்டும் இதே தொகுதிக்கு வருவேன்.! சத்தியம் செய்த முதல்வர் ஸ்டாலின்..!
இந்த நிலையில் காரைக்குடியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை நேரத்தை தாண்டி வாக்கு சேகரித்ததாக புகார் எழுந்துள்ளது. மாலை 6:00 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்த நிலையில் 6.05 மணி வரை பரப்புரை செய்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி ரவிச்சந்திரன் மீது தேர்தல் விதிமீறல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பிரதமரை "தீவிரவாதி" என்பதா..? காங்கிரசாருக்கு நாவடக்கம் தேவை..! தமிழக பாஜக கண்டனம்..!!