தேர்தல் வேட்டை: சிக்கிய 4 கிலோ தங்க நகைகள்... பறக்கும் படை அதிகாரிகள் கையிலிருந்து நழுவிய தரமான சம்பவம்...!
கர்நாடகாவிலிருந்து ஓசூர் தனியார் ஜுவல்லரி கம்பெனிக்கு எடுத்துவரப்பட்ட 6 கோடி ரூபாய் மதிப்புடைய தங்க நகைகள் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல்
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததையடுத்து இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின்படி வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்கும் வகையில் பணப்புழக்கத்தை கட்டுப்படுத்த தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது. தேர்தல் நடத்தை விதிகளின் படி பொதுமக்கள் 50 ஆயிரம் ரூபாயை மட்டுமே எடுத்துச் செல்ல முடியும். கூடுதலாக பணம் கொண்டு சென்றால் அதற்கான ஆவணங்கள் சரியாக இருக்க வேண்டும். கடந்த 3 நாட்களாக தமிழ்நாடு முழுவதும் சோதனையில் ஈடுபட்டு வரும் தேர்தல் பறக்கும் படையினர், கர்நாடகா, கேரளா, ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களின் எல்லை பகுதிகளிலும் சோதனை சாவடிகளை அமைத்து தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கர்நாடகாவிலிருந்து ஓசூர் தனியார் ஜுவல்லரி கம்பெனிக்கு எடுத்துவரப்பட்ட 6 கோடி ரூபாய் மதிப்புடைய தங்க நகைகள் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டு சார் ஆட்சியரகத்தில் ஆவணங்கள் சரிபார்த்து வாகனம் அனுப்பி வைக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த தமிழக மாநில எல்லையான ஜூஜூவாடி சோதனைச்சாவடியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில், பெங்களூர் விமான நிலையத்திலிருந்து தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஜுவல்லரிக்கு BVC LOGISTICS என்னும் பார்சல் நிறுவன வாகனத்தில் தங்கநகைகள் கொண்டுவரப்பட்டது தெரியவந்தது.
இதையும் படிங்க: அய்யோ தங்க மனசுய்யா..!! மூன்றரை சவரன் பிரேஸ்லெட்டை ஒப்படைத்த இளநீர் வியாபாரி.!!
ஒவ்வொரு பெட்டிக்குள்ளாக தான் ஆவணங்கள் இருப்பதாக கூறியதால் பாதுகாப்பு கருதி ஓசூர் சார் ஆட்சியரகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஆக்ரித்தி சேத்தி அவர்கள் ஒவ்வொரு பெட்டியாக தங்கநகைகள் மற்றும் ஆவணங்களை பரிசோதித்தனர்
சுமார் 6 கோடி ரூபாய் மதிப்புடைய 4 கிலோ தங்கம் கொண்டுவரப்பட்ட நிலையில் உரிய ஆவணங்கள் இருந்ததால் வாகனம் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது.
இதையும் படிங்க: அறிவாலயத்தில் ஓபிஎஸ்! தென் மாவட்ட திமுக வேட்பாளர்கள் நேர்காணலை தொடங்கினார் ஸ்டாலின்!