×
 

2026 ELECTION..! தேர்தல் பணி தீவிரம்... வாக்குப்பதிவு இயந்திரங்கள் ரெடி..!

வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதற்கட்ட சரிபார்ப்பு பணி நிறைவு பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலைகள் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் முதற்கட்ட சரிபார்ப்பு பணி நிறைவு பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் ஜனநாயக அமைப்பின் முதுகெலும்பாக இருக்கும் தேர்தல்கள், காலப்போக்கில் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக மாற்றமடைந்துள்ளன. 1980களின் பிற்பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்குச் சீட்டுகளின் சிக்கல்களான போலி வாக்குகள், காலதாமதம் மற்றும் செலவு ஆகியவற்றை குறைத்து, வாக்குப்பதிவு செயல்முறையை விரைவுபடுத்தின.

இந்த இயந்திரங்கள், தேர்தல் ஆணையத்தின் (ECI) கண்காணிப்பில் தயாரிக்கப்படுகிறது. 2013ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அறிமுகப்படுத்தப்பட்ட வாக்காளர் சரிபார்க்கும் VVPAT, ஈவிம்களின் நம்பகத்தன்மையை மேலும் உறுதிப்படுத்தியது. 

தேர்தலுக்கு முந்தைய சரிபார்ப்பு பணிகள், இந்த இயந்திரங்களின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. தேர்தல் அறிவிப்பு வெளியான 4-6 மாதங்களுக்கு முன்பே, முதல் நிலை சோதனை தொடங்குகிறது. பொறியாளர்கள், மாவட்ட தேர்தல் அதிகாரியின் கண்காணிப்பில், அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இந்தப் பணியை மேற்கொள்கிறார்கள்.

இதையும் படிங்க: ஆட்டு மந்தையில் ஓநாய்..! பெண்கள் பாதுகாப்பை சூறையாடும் திமுக... நயினார் தாக்கு..!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வாக்கு செலுத்தும் இயந்திரங்கள் சரிபார்க்கும் பணிகள் பல்வேறு இடங்களில் நடைபெறுகிறது. இதனிடையே தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல் கட்ட சரிபார்ப்பு பணி நிறைவு பெற்றுள்ளது. 1.75 லட்சம் வாக்குப்பதிவு இயந்திரங்களின் சரிபார்ப்பு பணி நிறைவு பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 1.10 லட்சம் கட்டுப்பாட்டு அமைப்புகள், 1.16 லட்சம் விவிபேட் இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தமிழக அரசின் புதிய செம்மொழி இலக்கிய விருது..! சாகித்ய அகாடமி பிரச்சனைக்கு மாற்றாக அறிவிப்பு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share