×
 

தமிழக அரசின் அடுத்த மெகா பிளான்... ஒன்றல்ல 5 இடங்களில் அதிரடி... எங்கெல்லாம் தெரியுமா?

தமிழகத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளர்ச்சிக்காக 5 புதிய மண்டலங்கள் உருவாக்கம்

தமிழ்நாட்டின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் வெளிப்படையான நிர்வாகம், செயல்திறன் மற்றும் விரைவான சேவை வழங்கலை உறுதி செய்து, திட்டங்களை துரிதப்படுத்துவதன் மூலம் மாநிலத்தின் பசுமை ஆற்றல் வளர்ச்சியை மேலும் வலுப்படுத்தும் வகையில் ஐந்து புதிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மண்டலங்கள் உருவாக்கப்பட உள்ளன.

தமிழகத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையின் நிர்வாக செயல்திறனை மேம்படுத்தி, முதலீட்டாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விரைவான, வெளிப்படையான மற்றும் எளிமையான சேவைகளை வழங்குவதற்காக முக்கிய நிர்வாக மறுசீரமைப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருவதாக எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காற்றாலை மற்றும் சூரிய மின் திட்டங்களின் செயல்பாடுகளை மேலும் விரைவுபடுத்தும் நோக்கில், ஏற்கனவே செயல்பட்டு வந்த உடுமலைப்பேட்டை மற்றும் திருநெல்வேலி புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வட்ட நிர்வாக அமைப்புகளை மறுசீரமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

இதையும் படிங்க: #Viralvideo அவுட் ஆப் கண்ட்ரோலில் தவெக நிர்வாகிகள்... அரசு பள்ளிக்குள் நுழைந்து அட்ராசிட்டி...!

அதன்படி, மாநிலம் முழுவதும் சென்னை, திருச்சி, திருநெல்வேலி, கோவை மற்றும் மதுரை ஆகிய இடங்களை தலைமையிடங்களாகக் கொண்டு ஐந்து புதிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மண்டலங்கள் உருவாக்கப்படுகின்றன.

அரசின் பசுமை ஆற்றல் இலக்குகளை வலுப்படுத்தும் வகையில், காற்றாலை மற்றும் சூரிய மின் திட்டங்களின் செயல்பாடுகளை ஒருங்கிணைத்து விரிவுபடுத்த இந்த நிர்வாக அமைப்புகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய மண்டலங்களின் கீழ்,

  • சென்னை மண்டலம் – சென்னை, காஞ்சிபுரம், வேலூர் மற்றும் திருவண்ணாமலை மின் பகிர்மான மண்டலங்களை உள்ளடக்கும்.
  • திருச்சி மண்டலம் – திருச்சி, விழுப்புரம் மற்றும் தஞ்சாவூர் மின் பகிர்மான மண்டலங்களை உள்ளடக்கும்.
  • திருநெல்வேலி மண்டலம் – திருநெல்வேலி மின் பகிர்மான மண்டலத்தை உள்ளடக்கும்.
  • கோவை மண்டலம் – கோவை மின் பகிர்மான மண்டலத்தை உள்ளடக்கும்.
  • மதுரை மண்டலம் – கரூர், ஈரோடு மற்றும் மதுரை மின் பகிர்மான மண்டலங்களை உள்ளடக்கும்.

காற்றாலை மற்றும் சூரிய மின்சக்தி திட்டங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்தவும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியை அதிகரிக்கவும் இந்த புதிய மண்டலங்கள் முக்கிய பங்காற்றும் என அரசு தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: சென்னை அண்ணா சாலை நில மோசடி..!! திமுக எம்.பி கலாநிதி வீராசாமி மகன் மீது பாய்ந்த வழக்கு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share