உஷாரா இருங்க..! வாக்கு எண்ணிக்கை வரைக்கும் கவனமா செயல்படனும்..! இபிஎஸ் அறிவுறுத்தல்..!
தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடியும் வரை கவனமாக செயல்பட வேண்டும் என அதிமுகவினருக்கு எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தினார்.
தமிழ்நாட்டில் 2026 சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23 அன்று ஒரே கட்டமாக நடைபெற்றது. மாநிலத்தின் 234 தொகுதிகளிலும் உள்ள 75,026 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்றது. இந்தத் தேர்தலில் சுமார் 5.73 கோடி வாக்காளர்கள் பங்கேற்றனர். தேர்தல் ஆணையத்தின் உத்தேச தரவுகளின்படி, மொத்த வாக்குப்பதிவு சதவீதம் வரலாற்று உயர்வாக 85.15 சதவீதமாக பதிவாகியுள்ளது.
இது 2021 தேர்தலைவிட சுமார் 11.52 சதவீதம் அதிகமாகும். ஆண்கள் 83.57 சதவீதம், பெண்கள் 85.76 சதவீதம், மூன்றாம் பாலினத்தவர்கள் 60.49 சதவீதம் வாக்குகள் பதிவு செய்தனர். இந்த உயர் வாக்குப்பதிவு தமிழ்நாட்டின் ஜனநாயக உணர்வை பிரதிபலிப்பதாக பார்க்கப்படுகிறது. மே நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளியாகிறது.
இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை முடியும் வரை மிகவும் விழிப்புடனும் கவனத்துடனும் அதிமுகவினர் அயராது பணியாற்ற வேண்டும் என கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கேட்டுக் கொண்டுள்ளார். கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஜனநாயக கடமையாற்றிய தமிழக வாக்காள பெருமக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இரவு பகல் பாராமல் தேர்தல் பணியாற்றிய அதிமுக மற்றும் NDA கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக கூறியுள்ளார்.
இதையும் படிங்க: இபிஎஸ் தொகுதியில் இருந்து வெளியான அதிர்ச்சி வீடியோ... பாமக பிரமுகர் வெடித்தது சர்ச்சை... சீனுக்கு வரும் தேர்தல் ஆணையம்...!
வாக்கு எண்ணிக்கை மையங்களில் அனைத்து ஏற்பாடுகளும் முறைப்படி செய்யப்பட்டு இருக்கிறதா என்பதையும் உறுதி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். தபால் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் போது மிகவும் கவனமுடன் கண்காணிக்க வேண்டும் என்று தெரிவித்தார். வாக்குப்பதிவு இயந்திரங்களில் வைக்கப்பட்டுள்ள செயல் முறையாக உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். கோடான கோடி மக்களின் பேராதரவோடு அதிமுக, கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் மகத்தான வெற்றி பெறுவார்கள் என்றும் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: “100% Confident ஆக இருக்கேன்...” - குடும்பத்துடன் ஜனநாயக கடமையாற்றிய இபிஎஸ்... சிரித்த முகத்துடன் சொன்ன முக்கிய செய்தி...!