×
 

பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும்.. திருச்சியில் மாபெரும் ஆர்ப்பாட்டம்..!! இபிஎஸ் அறிவிப்பு..!!

தட்டுத் தடுமாறி ஆட்சியில் அமர்ந்துள்ள தவெக அரசு, கடந்த ஆட்சியின் மீட்சியாகவே இருக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

பெண்களின் பாதுகாப்பில் போதிய அக்கறை செலுத்தாத தமிழக அரசை கண்டித்து அதிமுக திருச்சி புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பில் வரும் 18-ம் தேதி புள்ளம்பாடி அண்ணா திடலில் பெரிய அளவிலான கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி இதை அறிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், தற்போதைய தமிழக அரசு பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கியுள்ளதாகவும், போதைப்பொருட்கள் தாராளமாகப் புழங்குவதாகவும், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார். கடந்த திமுக ஆட்சியில் மக்கள் பாதுகாப்பின்றி தவித்த நிலை, இப்போதைய ஆட்சியிலும் தொடர்வதாக அவர் விமர்சித்தார். நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்த இந்த அரசு, முந்தைய ஆட்சியின் தொடர்ச்சியாகவே செயல்படுவதாகக் கூறினார்.

குறிப்பாக, திருச்சி புறநகர் கிழக்கு மாவட்டம், லால்குடி தொகுதி, புள்ளம்பாடி ஒன்றியம், சிறுகளப்பூர் பகுதியில் சமீபத்தில் நிகழ்ந்த கொடூர சம்பவத்தைச் சுட்டிக்காட்டினார். அங்கு இரு குழந்தைகளுக்கு தாயான 32 வயது இளம் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டு, ஏரிக்கரையில் சடலமாக மீட்கப்பட்டார். 

இதையும் படிங்க: மாநில உரிமைகளை தவெக அரசு விட்டுக்கொடுக்காது! எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் வன்னியரசு பதிலடி!

இந்த வழக்கில் அரசு துரித நடவடிக்கை எடுக்கத் தவறியதால் உள்ளூர் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். போதைப்பொருட்கள் கட்டுப்பாடின்றி பரவுவதும் மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஆட்சியாளர்களின் அலட்சியப் போக்கே இத்தகைய சம்பவங்களுக்கு காரணம் என எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்தார்.

இந்நிலையில், 18.7.2026 சனிக்கிழமை காலை 10 மணிக்கு புள்ளம்பாடி அண்ணா திடலில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு அதிமுக மாவட்ட நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர். கழக மகளிர் அணிச் செயலாளரும், செய்தித் தொடர்பாளருமான முன்னாள் அமைச்சர் பா. வளர்மதி தலைமையிலும், மாவட்டக் கழகச் செயலாளர் T.N. சிவக்குமார் முன்னிலையிலும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும். லால்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், கழக சார்பு அமைப்புகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள் மற்றும் ஏராளமான கழக உடன்பிறப்புகள் பெருந்திரளாகப் பங்கேற்க உள்ளனர். 

பெண்கள் நலன் மற்றும் மக்கள் பாதுகாப்பை முன்னிறுத்தி நடைபெறும் இந்தப் போராட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அதிமுக தலைமை அன்புடன் அழைப்பு விடுத்துள்ளது.இந்த சம்பவங்கள் தமிழகம் முழுவதும் பெண் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ள நிலையில், அதிமுகவின் இந்த ஆர்ப்பாட்டம் பெரும் எதிரொலியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 

இதையும் படிங்க: இருமுறை எம்.எல்.ஏ சீட் மறுப்பு! ஆதரவாளர்களுடன் கட்சியை விட்டு ஓடிய இபிஎஸ்-ன் ரத்த சொந்தம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share