நிதிஷுக்கே இந்த நிலைமை... EPS பத்தி சொல்லணுமா? K.C. பழனிசாமி எச்சரிக்கை..!!
நிதீஷ் குமாருக்கு இந்த நிலைமை என்றால் எடப்பாடி பழனிச்சாமியை பற்றி சொல்ல வேண்டுமா என K..C. பழனிசாமி தெரிவித்தார்.
கட்சியை நிறுவி 20 ஆண்டுகள் முதல்வராக இருந்த நிதிஷ்க்கே இந்த நிலை என்றால் எடப்பாடியின் நிலை என்னவாக இருக்கும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி. பழனிசாமி தெரிவித்துள்ளார். பீகாரில் நிதிஷ்குமார் எதிர்கொண்ட அரசியல் சூழ்நிலையை கவனித்து பார்த்தால், அதே போன்ற ஒரு நிலை தற்போது எடப்பாடியின் அரசியல் பயணத்திலும் தோன்றுகிறது என்று தெரிவித்துள்ளார்.
பீகாரில் கூட பிரதமர் மோடி “நிதிஷ் தலைமையில்தான் தேர்தலை சந்திக்கிறோம்” என்று கூறி இருந்ததாகவும், ஆனால் தமிழ்நாட்டில் பிரச்சாரத்துக்கு வரும் போதெல்லாம் அவர் பொதுவாக “NDA ஆட்சி அமையும்” என்றே கூறி வருகிறார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அதுபோக தேர்தலுக்கு முன்பே கூட்டணி குறித்து ஆலோசிக்க அமித்ஷாவை சந்திக்க எடப்பாடி டெல்லிக்கு செல்லும் நிலை இருந்தது என்றும் கூறினார். இதனால் தேர்தலுக்குப் பிறகு இந்த அரசியல் சமன்பாடு மேலும் சிக்கலாகும் வாய்ப்பும் உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டி உள்ளார். இவ்வளவு காலம் கட்சியை உருவாக்கி முதல்வராக இருந்த நிதிஷ்குமார்க்கே இந்த நிலை என்றால், எடப்பாடியின் நிலை எப்படி மாறும் என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது என்று எச்சரித்தார்.
இதையும் படிங்க: வெல்லமண்டி நடராஜனுக்கு புதிய பொறுப்பு... EPS எடுத்த அதிரடி முடிவு..!!
இன்று பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் எதிர்கொண்டு வரும் அரசியல் சூழலைப் பார்த்தால், எதிர்காலத்தில் அதிமுகவுக்கும் அதே நிலை வருவதற்கான அறிகுறிகள் இப்போதே தென்படுவதாகவும், தேர்தலுக்கு முன்பே பாஜகவின் அரசியல் கட்டுப்பாட்டுக்குள் முழுமையாக சென்ற நிதிஷ்குமார் மற்றும் இன்றைய எடப்பாடியின் அரசியல் நிலை ஆகியவற்றில் பெரிய வித்தியாசம் இருப்பதாக தெரியவில்லை என்றும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: கை காட்டுனாராம்... வைரல் ஆச்சாம்..! இவரெல்லாம் முதல்வர்... சிவகங்கை தாக்குதல் சம்பவத்தால் கொந்தளித்த இபிஎஸ்..!!