×
 

தமிழகத்தில் NDA கூட்டணிக்கு எடப்பாடி தலைமை… ஊழல் மட்டுமே திமுக சாதனை..! EPS, பியூஷ் கோயல் கூட்டாக பேட்டி..!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

தமிழகத்திற்கு வருகை தந்துள்ள பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் மற்றும் பாஜக முக்கிய நிர்வாகிகளுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி என்ற காலை விருந்தளித்தார். தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், H. ராஜா, L. முருகன், பொன். ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் உள்ளிட்ட பல பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் காலை விருந்து அளிக்கப்பட்டதுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

தொடர்ந்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இல்லத்தில் காலை விருந்து அளிக்கப்பட்டதாகவும் எடப்பாடி பழனிச்சாமி தனது பழைய நண்பர் எனவும் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் வரும் தேர்தலில் திமுக அரசை அகற்றிவிட்டு தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயம் வெல்லும் என பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள இளைஞர்கள், பெண்கள், சாமானியர்கள் என அனைத்து தரப்பு மக்களும் திமுக அரசின் ஊழல்கள் மற்றும் ஏமாற்று வேலைகளை நன்கு அறிந்து உள்ளதாகவும் தெரிவித்தார். அனைத்து துறைகளிலும் ஊழல் செய்தது மட்டும்தான் திமுக அரசின் சாதனை என்றும் கூறினார். திமுக குடும்ப ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இதையும் படிங்க: EPS இல்லத்தில் அரசியல் விருந்து..! பியூஷ் கோயல் உள்ளிட்ட பாஜக முக்கிய தலைகள் பங்கேற்பு..!

சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசி வருகிறார் என்றும் நீதிமன்றமே அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து இருப்பதையும் குறிப்பிட்டு பேசினார். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எடப்பாடி பழனிச்சாமி தலைமை தாங்குவார் என தெரிவித்தார்.  அவரைத் தொடர்ந்து பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, நாளை பிரதமர் தலைமை நடைபெறும் கூட்டம் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வரும் என்று தெரிவித்தார். நாளை நடைபெறும் பொதுக் கூட்டத்திற்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: வாங்க..! சரித்திர வெற்றி படைப்போம்...! இபிஎஸ்க்கு நன்றி சொன்ன TTV தினகரன்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share