#BREAKING: பரபரக்கும் அரசியல் களம்… சத்தமின்றி சம்பவம் செய்த இபிஎஸ்…!
செங்கோட்டையன் ஆதரவாளர்கள் 40 பேரை பொறுப்புகளில் இருந்து எடப்பாடி பழனிச்சாமி விடுவித்துள்ளார்.
செங்கோட்டையன், ஈரோடு பகுதியின் பிரபலமான அரசியல் முகமாக இருந்து வருபவர். அவர், அதிமுகவின் பழமைவாத இறையாண்மை அணுகுமுறையைப் பின்பற்றி, கட்சியின் ஒருங்கிணைப்புக்கு அடிக்கடி குரல் கொடுத்து வருகிறார். கடந்த சில வாரங்களாக, அதிமுகவில் உள்ள பிளவுகளை சரி செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தி வந்தார்.
குறிப்பாக, கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட தலைவர்களான ஓ.பன்னீர்செல்வம், கே.சி.பழனிசாமி, தினகரன் போன்றோரை அரவணைக்க வேண்டும் என 10 நாட்கள் காலக்கெடுவுடன் அறிவித்தது ஈபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கட்சித் தலைமைக்கு செங்கோட்டையன் கெடு விதித்ததன் விளைவாக, செங்கோட்டையன் அமைப்புச் செயலர், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்டார்.
அவருக்கு ஆதரவாக பல கட்சி நிர்வாகிகள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். செங்கோட்டை எனக்கு ஆதரவு தெரிவித்த முக்கிய நிர்வாகிகளும் கட்சி பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டனர். அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் என்று கூறிய செங்கோட்டையனுக்கு ஓபிஎஸ் உள்ளிட்டோர் முழு ஆதரவு தெரிவித்தனர். அனைவரும் ஒன்றிணைந்தால்தான் திமுகவை அகற்ற முடியும் என்பது இவர்களின் கருத்தாக இருக்கிறது.
இதையும் படிங்க: உங்க வீடியோ தான் ஸ்டாலின் DOUBT- ஆ இருக்கு... சிபிஐ விசாரணை வேண்டும்... பந்தாடிய இபிஎஸ்...!
இந்த நிலையில் செங்கோட்டையன் ஆதரவாளர்கள் 40 பேரை அதிமுகவின் பொறுப்புகளில் இருந்து எடப்பாடி பழனிச்சாமி விடுவித்து உத்தரவு பிறப்பித்துள்ளார். ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நிர்வாகிகள் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: #BREAKING: DMK FAILS… ஆளுங்கட்சிக்கு ஒரு நீதி எதிர்க்கட்சிக்கு ஒரு நீதி… சாட்டையை சுழற்றிய இபிஎஸ்…!