விஜய் பொறுப்பேற்ற நாள் முதலே இப்படித்தான்... தூத்துக்குடி சம்பவத்தை சுட்டிக்காட்டி எரிமலையாய் வெடித்த அனிதா ராதாகிருஷ்ணன்...!
குறிப்பாக தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஏரல் பகுதியில் நடைபெற்றுள்ள பாலியல் சம்பவம் மாவட்டத்திற்கு ஒரு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது .
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே பெண்ணுக்கு நடைபெற்ற பாலியல் துன்புறுத்தல் சம்பவம் தூத்துக்குடி மாவட்டத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது எனவும் இந்த தவெக ஆட்சி வந்த நாள் குற்ற செயல்கள் பெருகிவிட்டது என தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகில் உள்ள தண்டுபத்து கிராமத்தில் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசியபோது இதனை தெரிவித்தார்.
திருச்செந்தூர் அருகே உள்ள தண்டுபுத்து கிராமத்தில் உள்ள தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் முன்னாள் அமைச்சரும் திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினரும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அனிதா ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், தமிழகத்தில் மாற்றத்தை தருவதாகவும் பெண்களுக்கு பாதுகாப்பு போதை பொருள் லாட்டரி விற்பனை என்பது நடைபெறாது என தெரிவித்து தமிழக முதல்வர் விஜய் ஆட்சிக்கு வந்துள்ளார். ஆனால் அவர் பொறுப்பேற்ற நாள் முதல் தமிழகம் முழுவதும் குற்ற சம்பவங்கள் பெருகி வருகிறது.
இதையும் படிங்க: வழக்கம்போல வாந்தி எடுத்து வச்சிருக்கீங்களே..? பல்டி அடிக்க கேவலமா இல்லையா..? திமுக தாக்கு..!!
குறிப்பாக தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஏரல் பகுதியில் நடைபெற்றுள்ள பாலியல் சம்பவம் மாவட்டத்திற்கு ஒரு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது . வேலை வாங்கி தருவதாக என்னை அழைத்துச் சென்று குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து அவரை பாலியல் ரீதியாக தவெகவை சார்ந்த பாலமுருகன் மற்றும் ஜெயபால் ஆகியோர் துன்புறுத்தி உள்ளனர்.
இவர்கள் யார் என்றால் கள்ள லாட்டரி விற்பனை செய்பவர்களுக்கு துணை போனவர்கள். இவர்கள் இந்த சம்பவத்திற்கு தமிழக வெற்றி கழகத்தினர் பதிலளிக்க வேண்டும். வருகின்ற இடைத்தேர்தலில் அவர்கள் எந்த வகையிலும் வெற்றி பெற முடியாது மக்கள் தெளிவாக மாறிவிட்டார்கள். பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்பவர்கள், கள்ள லாட்டரி விற்பனை செய்பவர்கள், கஞ்சா விற்பவர்கள் என அதிகமாக உள்ள கட்சி தமிழக வெற்றிக்கழகம் கட்சிதான்.
எந்த குற்றச்சாட்டு எப்போது நடந்தாலும் சுட்டிக் காட்டக்கூடிய கடமை திமுகவிற்கு உண்டு. அந்தக் கடமையை தான் திமுக தலைவர் மு க ஸ்டாலின் செய்து வருகிறார். ஆறு மாசம் கழித்து தான் குற்றச்சாட்டை சொல்ல வேண்டுமென்றால், இந்த ஆட்சி ஆறு மாசம் இருக்குமா என்பதே தெரியாத நிலை தான் உள்ளது என தெரிவித்தார்.
இதையும் படிங்க: "வாயில நல்லா வந்துடும்".. முதல்வர் பேச்சால் சர்ச்சை..! அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்..!!