×
 

"சொன்னத செய்யல"..! பயிர்க்கடன் தள்ளுபடியில் அதிருப்தி..! விவசாயிகள் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..!

பயிர்க்கடன் தள்ளுபடியில் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

தமிழ்நாட்டின் புதிய அரசு, முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையில், 2026 மே 25 அன்று பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்தை அறிவித்தது. கூட்டுறவு வங்கிகள் மூலம் பெறப்பட்ட பயிர்க்கடன்களில், குறு விவசாயிகளுக்கு ரூ.50,000 வரை முழு தள்ளுபடியும், பெரு விவசாயிகளுக்கு தலா ரூ.5,000 நிவாரணமும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டம் சுமார் 14.22 லட்சம் விவசாயிகளுக்கு பயனளிக்கும் எனக் கூறப்பட்டாலும், இந்த அறிவிப்பு விவசாய சமூகத்தில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் வாக்குறுதிகளுக்கு மாறாக இந்தத் திட்டம் வெளியாகியிருப்பதால், விவசாயிகள் இதை “மிகப்பெரிய ஏமாற்றம்” என விமர்சிக்கின்றனர். தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் அறிக்கையில், சிறு-குறு விவசாயிகளுக்கு பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும், ஐந்து ஏக்கருக்கு மேல் உள்ளவர்களுக்கு 50 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படும் என உத்தரவாதம் அளித்திருந்தது.

2021இல் தள்ளுபடி செய்யப்பட்ட தொகை ரூ.12,000 கோடியாக இருந்தது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது சுமார் ரூ.2,044 கோடி மட்டுமே. இது விவசாய சங்கங்களை கொந்தளிக்க வைத்துள்ளது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள், “தேர்தல் உத்தரவாதத்துக்கு மாறாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

இதையும் படிங்க: இடைத்தரகர் மூலம் ஒப்பந்தம்..! விவசாயிகளுக்கு பெரும் அவதி... பி.ஆர். பாண்டியன் பேட்டி..!

தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள பயிர்க்கடன் தள்ளுபடி விவசாயிகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் அளித்துள்ளதாக கூறுகின்றனர். இதன் காரணமாக ஜூன் 1ல் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் அறிவித்துள்ளது. விவசாயிகளுக்கு பயனளிக்காத இந்தத் திட்டத்தை ரத்து செய்து, வாக்குறுதி அளித்தபடி சிறு - குறு விவசாயிகளுக்கு முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி என்ற அறிவிப்பை செயல்படுத்திட வேண்டும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் வலியுறுத்தி உள்ளது. 

இதையும் படிங்க: தவறு நிரூபித்தால் கடும் ஆக்ஷன்..! அமைச்சர் ரமேஷ் எச்சரிக்கை..! போராட்டத்தை கைவிட்ட மாணவிகள்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share