இடைத்தரகர் மூலம் ஒப்பந்தம்..! விவசாயிகளுக்கு பெரும் அவதி... பி.ஆர். பாண்டியன் பேட்டி..!
மன்னார்குடியில் பி.ஆர். பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
பெட்ரோல் டீசல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என்றும் ஜூன் 12 மேட்டூர் அணை திறப்பிற்கு முன் கர்நாடகாவிடம் உரிய நீரை பெற வேண்டும் எனவும் பி ஆர் பாண்டியன் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, காவிரி டெல்டா மாவட்டங்களில் ஜுன்12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டு குருவை சாகுபடி மேற்கொள்ளப்பட வேண்டும்.சென்ற ஆண்டு 6.50 லட்சம் ஏக்கரில் குருவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. தற்போது மேட்டூர் அணையில் 80 அடி தண்ணீர் உள்ள நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி கர்நாடகாவிடம் உரிய நீரை பெற தமிழக அரசு அவசர கால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.
நெல் விதைகளில் கலப்படம் முளைப்புத் திறனற்ற விதைகள் விற்பனை உள்ளிட்ட மோசடி நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேளாண் துறை முன்வர வேண்டும். தரமான விதைகள் விற்பனையை உறுதிப்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ள அவர், திருநெல்வேலி, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தற்போது அறுவடை பணிகள் முடிவுற்றுள்ளது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில்தேசிய நுகர்வோர் கூட்டமைப்பு கொள்முதலுக்கான ஒப்பந்தம் செய்துள்ளது என்றார்.
இதையும் படிங்க: இந்திய மக்களுக்கு கிடைத்த கவுரவம்!! ஐக்கிய அரபு அமீரகத்தில் பிரதமர் மோடி பெருமிதம்!
முந்தைய அரசின் துணையோடு பணப்பரிமாற்றமோ,அடிப்படைக் கட்டமைப்போ இல்லாத இடைத்தரகர் ஒப்பந்தத்தை தனியார் நிறுவனம் பெற்றுள்ளது. இதனால கொள்முதல் செய்த நெல்லுக்கு விவசாயிகளுக்கு 45 நாட்களை கடந்தும் பணம் பட்டுவாடா செய்யப்படவில்லை. இதனால் விவசாயிகள் மிகப் பெரும் சிரமத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.அரச பொறுப்பேற்று உடனடியாக உரிய தொகை விவசாயிகளுக்குவிடுவிக்க முன்வர வேண்டும். தனியார் இடைத்தரகர் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: நடிகையுடன் ரகசிய தொடர்பு! கொதித்தெழுந்த மனைவி! பளார் வாங்கிய பிரான்ஸ் அதிபர்!