×
 

"பத்தல..! பத்தல"..! பயிர்க்கடன் தள்ளுபடி..! சாட்டையடித்து விவசாயிகள் போராட்டம்..!!

பயிர் கடன் தள்ளுபடி விவகாரத்தை சுட்டிக்காட்டி விவசாயிகள் சாட்டை அடித்துக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் அறிக்கையில், சிறு-குறு விவசாயிகளுக்கு பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும், ஐந்து ஏக்கருக்கு மேல் உள்ளவர்களுக்கு 50 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படும் என உத்தரவாதம் அளித்திருந்தது. 2021இல் தள்ளுபடி செய்யப்பட்ட தொகை ரூ.12,000 கோடியாக இருந்தது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது சுமார் ரூ.2,044 கோடி மட்டுமே. இது விவசாய சங்கங்களை கொந்தளிக்க வைத்தது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள், “தேர்தல் உத்தரவாதத்துக்கு மாறாக இந்த அறிவிப்பு வெளியாகியது. தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள பயிர்க்கடன் தள்ளுபடி விவசாயிகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் அளித்துள்ளதாக கூறிய நிலையில் புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. கூட்டுறவு வங்கிகளில் 75 ஆயிரம் ரூபாய் வரை கடன் பெற்றவர்களுக்கு 100% தள்ளுபடி என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.

50,000 ரூபாய் வரை தள்ளுபடி என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பும் போதுமானதாக இல்லை என்று விவசாய சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சேலம் மாவட்டம் நல்லா கவுண்டம்பட்டியில் விவசாயிகள் சாட்டை அடித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: “பிள்ளைகளுக்கு பீஸ் கட்ட முடியல...” - முதலமைச்சர் விஜய்க்கு எதிராக ஒன்றிணைந்த விவசாயிகள்... தமிழகமே பரபரப்பு...!

பயிர் கடன் தள்ளுபடி போதுமானதாக இல்லை எனக் கூறி தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் சாட்டை அடித்துக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டதுடன் முழக்கங்களை எழுப்பினர். தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் வாக்குறுதி படி பயிர் கடன்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர். ரூ. 75,000 வரையே முழுமையாக பயிர் கடன் தள்ளுபடி என்பது போதுமானதாக இல்லை என்ற குற்றம் சாட்டியுள்ளனர். 

இதையும் படிங்க: நிதி உண்மைகள் வெளிச்சம் பார்க்குமா? காத்திருக்கும் தமிழகம்… இன்று வெளியாகிறது வெள்ளை அறிக்கை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share