×
 

தஞ்சாவூரில் ட்ரோன்கள் பறக்கத் தடை... 130 சிசிடிவி கேமராக்களுடன் தீவிர கண்காணிப்பு... போலீஸ் குவிப்பு...!

தஞ்சாவூர்  வாக்கு எண்ணும் மைய பகுதியை சுற்றி  ட்ரோன்கள் பறக்க தடை 

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலில், ஏப்ரல் 23-ல் வாக்குப்பதிவு முடிந்ததும், வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மற்றும் விவிபேட் (VVPAT) கருவிகள் பாதுகாப்பாக சீல் வைக்கப்பட்டு, மாநிலம் முழுவதும் உள்ள 62 மையங்களில் உள்ள ஸ்ட்ராங் ரூம்களுக்கு (Strong Room) மாற்றப்பட்டுள்ளன. மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வரை, மத்திய துணை ராணுவப்படை மற்றும் உள்ளூர் காவல்துறை இணைந்து 4 அடுக்கு பாதுகாப்பில் இந்த அறைகள் 24/7 கண்காணிக்கப்படுகின்றன.

தஞ்சாவூர்,   திருவையாறு,  ஒரத்தநாடு  ஆகிய 3 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையமான  அரசு குந்தவை நாச்சியார் கலைக் கல்லூரியில்  130 CCTV கேமராக்கள் கண்காணிப்பு பணிக்காக வைக்கப்பட்டுள்ளது

 ஒரு சிப்ட்டுக்கு   துணை ராணுவத்தினர் உள்ளிட்ட 75 போலீசார் என   3 சிப்டுக்கு  நாள் ஒன்றுக்கு  225 போலீசார் வீதம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்கு எண்ணும் தஞ்சாவூர், திருவையாறு, ஒரத்தநாடு  ஆகிய 3 தொகுதிகளில்  பதிவான  வாக்குபதிவு இயந்திரங்கள்

இதையும் படிங்க: 5 ஓட்டு கூட முழுசா விழலையே... தமிழ்நாடே எதிர்பார்த்த ஏரியாவில் ஏமாற்றம்... அதிகாரிகள் ஷாக்...!

தஞ்சாவூர்  அரசு குந்தவை நாச்சியார் கலைக் கல்லூரியில்  பாதுகாப்பாக வைக்கப்பட்டு,     அறைகளுக்கு   தஞ்சை மாவட்ட ஆட்சியர்  பிரியங்கா பங்கஜம் முன்னிலையில்,   தேர்தல்  பார்வையாளர்கள்  அரசியல் கட்சியினர்,  போலீசார்  முன்னிலையில்  சீல் வைக்கப்பட்டு  துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்   

சி.சி.டி.வி  கண்காணிப்பு வளையத்தில்  உள்ள அரசு குந்தவை நாச்சியார் கலைக்  கல்லூரி முழுவதும்  துணை ராணுவத்தினர் கட்டுப்பாட்டில் உள்ளது. 

இதையும் படிங்க: வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு... வாக்களிக்க முடியாமல் மக்கள் தவிப்பு... 50 நிமிடமாக காத்திருந்த கே.என்.நேரு...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share