த.மா.கா. தனிச் சின்னத்தில் போட்டி..! பியூஷ் கோயலுடன் ஆலோசித்த பிறகு ஜி.கே. வாசன் அறிவிப்பு..!
என் டி ஏ கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் தனி சின்னத்தில் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) இணைந்திருப்பது தமிழக அரசியலில் முக்கியமான திருப்பமாக அமைந்துள்ளது. இந்தக் கட்சியின் தலைவரான ஜி.கே. வாசன், முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவர் ஜி.கே. மூப்பனாரின் மகனுமாவார். 2024-ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு முன்பாகவே, பிப்ரவரி 26 அன்று தமிழ் மாநில காங்கிரஸ் அதிகாரப்பூர்வமாக பாஜக தலைமையிலான NDA-யில் இணைவதாக அறிவித்தது.
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு ஒவ்வொரு கட்சியினரும் தங்களது கூட்டணியை தேர்ந்தெடுத்து வருகின்றனர். குறிப்பாக தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ள கட்சிகள் தொகுதி பங்கீடு விவகாரத்திலும் மும்மூரம் காட்டி வருகின்றன. மேலும் பல கட்சிகள் என்டிஏ கூட்டணிக்கு வருவார்கள் என்று அறிவித்திருந்தனர். பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் தமிழகம் வந்துள்ள நிலையில் கூட்டணி கட்சியினர் அவரை சந்தித்து வருகின்றனர். கூட்டணியிலிருந்து விலகிய டிடிவி தினகரன் மீண்டும் என்டிஏ வில் இணைவதாக அறிவித்தார். என் டி ஏ கூட்டணியில் உள்ள கட்சியினர் பியூஷ் கோயலை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
நாளைய தினம் பிரதமர் மோடி தமிழகம் வரும் நிலையில் கூட்டணியை கட்சி தலைவர்களை ஒரே மேடையில் ஏற்ற முடிவு செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் நடைபெற்ற வருகின்றன. இந்த நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே வாசன் மற்றும் ஏ.சி சண்முகம் ஆகியோர் பியூஷ் கோயலை சந்தித்து ஆலோசனை நடத்தினர். இதன்பிறகு ஜி.கே வாசன் மற்றும் பியூஷ் கோயல் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய பியூஷ் கோயல், மிகப்பெரிய பெரும்பான்மையுடன் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரிவித்தார். சமூக நல்லிணக்கத்திற்கு எதிராக பேசும் உதயநிதி ஸ்டாலின் தண்டிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழகத்தில் NDA கூட்டணிக்கு எடப்பாடி தலைமை… ஊழல் மட்டுமே திமுக சாதனை..! EPS, பியூஷ் கோயல் கூட்டாக பேட்டி..!
தொடர்ந்து பேசிய ஜி.கே வாசன், தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி கூட்டணி என்றும் மக்கள் விரோத திமுகவை வீழ்த்தக்கூடிய பலமான மக்களின் நம்பிக்கையை பெற்ற கூட்டணி என்று தெரிவித்தார். ஒன்றுபடுவோம், செயல்படுவோம், வெற்றி பெறுவோம் என்று தெரிவித்தார். என் டி ஏ கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தனிச் சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவித்தார்.
இதையும் படிங்க: EPS இல்லத்தில் அரசியல் விருந்து..! பியூஷ் கோயல் உள்ளிட்ட பாஜக முக்கிய தலைகள் பங்கேற்பு..!