வகுப்பறைக்குள் வைத்து 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை... தலைமையாசிரியர் போக்சோவில் கைது...!
ஓசூர் அருகே அரசுப்பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு , தலைமை ஆசிரியர் போக்சோவில் கைது விசாரணை
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த அஞ்செட்டி அருகே உள்ள உரிகம் அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக சுதாகரன் வயது 50 என்பவர் பணியாற்றி வருகிறார். ஓசூரில் அன்னை நகரில் குடியிருந்து வருகிறார். இவருக்கு சொந்த ஊர் தேனி மாவட்டமாகும்,
இந்த நிலையில் கடந்த 27 ஆம் தேதி தலைமை ஆசிரியர் சுதாகரன் பள்ளியில் இருந்தபோது அங்கு படிக்கும் 5 ஆம் வகுப்பு மாணவியான 10 வயது சிறுமியிடம் அவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு பாலியல் தொந்தரவுகளை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவி அவரது தாயாரிடம் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து மாணவியின் தாய் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து குழந்தைகள் பாதுகாப்புத்துறை மற்றும் கல்வித் துறை அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் இதுகுறித்து அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாரும் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணை அடிப்படையில் தலைமை ஆசிரியர் சுதாகரனை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,
இதையும் படிங்க: கச்சா எண்ணெய் விலை உயர்வு: இந்தியாவில் உயர்கிறதா பெட்ரோல், டீசல் விலை..?? வெளியான முக்கிய அப்டேட்..!!
இந்நிலையில் அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருப்பதால் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்
இதையும் படிங்க: அமெரிக்க தூதரகத்தை தேடித்தேடி அழிக்கும் ஈரான்!! துபாய் தூதரகம் மீது ட்ரோன் தாக்குதல்! அதிகரிக்கும் பதற்றம்!