×
 

தவறான திருக்குறள்! ஆளுநர் அளித்த விருதால் சர்ச்சை... திரும்ப பெறப்பட்ட விவகாரம்..!

ஆளுநர் ரவி அளித்த விருதில் தவறான திருக்குறள் இடம்பெற்றதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டு உள்ளது.

எண்ணி துணிக என்ற தொடர் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பல்வேறு நிகழ்வுகளில் ஆளுநர் ரவி கலந்து கொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சி தமிழக இளைஞர்களையும் மாணவர்களையும் ஊக்குவிக்கும் நோக்கில் ஆளுநர் மாளிகையில் நடத்தப்படுகிறது. குறிப்பாக, இந்தத் தொடரின் 18வது பதிப்பில், ஆளுநர் மாளிகையில் பாரதம் மற்றும் 13-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த தமிழ் வம்சாவளி எழுத்தாளர்கள், கவிஞர்கள், பாடலாசிரியர்கள், சொற்பொழிவாளர்கள் மற்றும் புரவலர்கள் உள்ளிட்ட 250 தமிழ் அறிஞர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக எண்ணி துணிக என்ற பெயரில் சிறப்பாக செயல்பட்ட மருத்துவர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா கடந்த 13 ஆம் தேதி நடைபெற்றது.

தமிழக ஆளுநர் ஆர் என் ரவி கலந்து கொண்டு சீரிய முறையில் பணியாற்றிய மருத்துவர்களுக்கு விருதுகள் வழங்கினார். ஆளுநர் வழங்கிய விருதில் இடம்பெற்ற தவறான திருக்குறள் வாசகங்கள் சர்ச்சையை கிளப்பியுள்ளது.  ஆளுநர் வழங்கிய விருதில் திருக்குறள் என்ற பெயரில் இடம்பெறாத வாசகத்தால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. 944 ஆவது திருக்குறள் என்று பதிவிட்டு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. விருதுகளில் இடம்பெற்ற திருக்குறள் குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. புகைப்படங்கள் இணையதளத்தில் பரவிய நிலையில் விருதுகள் திரும்ப பெறப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தவறு சரி செய்யப்பட்டு விருதுகள் திரும்ப அழைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இல்லாத திருக்குறளை விருதுகளில் இடம்பெற செய்த சம்பவம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. 

 மனித வாழ்வின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கி, மதம், இனம் கடந்து அனைவருக்கும் பொருந்தும் திருக்குறள் இரண்டு வரிகளில் ஆழ்ந்த கருத்துகளை எளிமையாக வெளிப்படுத்தி, எளிதில் புரிந்து மனப்பாடம் செய்ய உதவுகிறது. ஒழுக்கம், நீதி, கருணை, நட்பு, ஆட்சி, காதல் என பல தலைப்புகளில் வாழ்வியல் வழிகாட்டுதலை வழங்கும் திருக்குறள் 2000 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டாலும், தலைமைத்துவம், நிர்வாகம், பொருளாதாரம் போன்றவை இன்றைய காலத்திற்கும் பொருந்தும்.

தமிழின் செம்மை, கவிதை நயம், ஒலி அழகு ஆகியவற்றை உலகிற்கு எடுத்துக்காட்டுகிறது. தனிநபர், சமூகம், அரசியல், பொருளாதாரம், கல்வி, குடும்பம் என அனைத்து தளங்களையும் உள்ளடக்கி உலகப் பொது மறை எனப் புகழப்படுகிறது. இவ்வளவு தனித்தன்மை பெருமைகளை பெற்ற திருக்குறளை அவமதிக்கும் விதமாக தவறான திருக்குறளை இடம் பெற்று இருப்பதாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: மீண்டும் டெல்லி பயணம்.. ஆளுநர் ரவியின் பிளான் என்ன..? பரபரக்கும் அரசியல் களம்..!

 

இதையும் படிங்க: அராஜக ஆட்சிக்கு அழிவு காலம் நெருங்கிடுச்சு! கொந்தளித்த நாயனார் நாகேந்திரன்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share