×
 

நீட் ரத்து... தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை..! EX. அமைச்சர் கோவி. செழியன் தாக்கு.!

முழுமையாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என கோவி. செழியன் வலியுறுத்தி உள்ளார்.

வினாத்தாள் வெளியானதால் ரத்து செய்யப்பட்ட நீட் தேர்வு நிரந்தரமாக ரத்து செய்யப்பட வேண்டும் என முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் வலியுறுத்து உள்ளார்.புதிதாக பொறுப்பேற்ற தமிழக அரசு பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் கோவி. செழியன் இன்று வேப்பத்தூர், அம்மன்பேட்டை, திருவிசைநல்லூர், திருபுவனம், திருவிடைமருதூர் போன்ற பகுதிகளில் வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது வேப்பத்தூரில் செய்தியாளர்களை முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் சந்தித்தார்.

அப்போது, வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதால் நீட் தேர்வு நாடெங்கும் ரத்து செய்யப்பட்டது. வட மாநிலங்களில் இது போல் அடிக்கடி வினாத்தாள் வெளியாவதால் வட மாநில தேர்வர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற்று அதிக அளவில் மருத்துவ கல்வி பயின்று வருகின்றனர். தற்போது வினாத்தாள் வெளியானதால் ரத்து செய்யப்பட்டு நீட் தேர்வு, நிரந்தரமாக ரத்து செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தினார். பிளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற வேண்டும் என்றார்.

இதையும் படிங்க: நீட் தேர்வு மையத்தில் பாஜக நிகழ்ச்சி... ஆத்திரமடைந்த பெற்றோர்கள் கல்லூரி நிர்வாகத்திடம் கடும் வாக்குவாதம்...!

இதற்கு புதிதாக பொறுப்பேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவி.செழியன் தெரிவித்தார். வழக்கமாக அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படும். ஆனால் புதிய அரசு பொறுப்பேற்ற போது தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது என்றும் குறிப்பிட்டார். இது தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு அமைப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.  தமிழ் தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோவி. செழியன் தெரிவித்தார் .

இதையும் படிங்க: என்ன STUDENTS ரெடியா..? நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share