“இரண்டுமே யூஸ்லெஸ்...” - தவெகவை தவிடி பொடியாக்கிய எச்.ராஜா... ஒரே கோரிக்கையில் உச்சக்கட்ட ட்விஸ்ட்...!
தமிழக அரசின் பொது பட்ஜெட் மற்றும் வேளாண்மை துறை பட்ஜெட் என இரண்டுமே யூஸ்லெஸ் பட்ஜெட் எனவும், ஒன்றும் தெரியாதவர் பட்ஜெட் போட்டால் என்ன ஆகும்? மக்கள் அனுபவிப்பார்கள்.
கோயில் நிலங்களை அபகரிக்கும் நபர்களை சிறையில் அடைத்தும் சிறைசேதம் செய்ய வேண்டும். தமிழக அரசின் இரண்டு பட்ஜெட்களும் யூஸ்லெஸ் பட்ஜெட் என பாஜக முத்த தலைவர் எச் ராஜா காஞ்சிபுரத்தில் பேட்டி.
பழனி, மதுரை போன்ற பல முக்கியக் கோயில்களுக்குச் சொந்தமான கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நிலங்கள், போலி ஆவணங்கள் மூலம் தனியாருக்கு மாற்றப்படுவதாக சமீபத்தில் கடுமையான புகார்கள் எழுந்துள்ளன. அரசு மற்றும் நீதிமன்றத்தின் தீவிர நடவடிக்கைகளால் பல நில மோசடிகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள நிலம் போலி ஆவணங்கள் மூலம் விற்கப்பட்ட வழக்கில், சார்பதிவாளர்கள் மற்றும் முக்கிய நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வழக்கு சிபிசிஐடி (CB-CID) விசாரணைக்கு மாற்றப்பட்டு, உயர் நீதிமன்றத்தில் அறிக்கைகளும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மதுரை பகுதியில் தொன்மையான கோயில் நிலங்கள் மற்றும் அரச மரபுச் சொத்துக்கள் கூட முறைகேடான முறையில் பட்டா மாற்றப்பட்டுள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் எச்.ராஜா தெரிவித்துள்ள கருத்து பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
இதையும் படிங்க: சட்டசபையில் முதல்வர் விஜய் - உதயநிதி பனிப்போர்? முகம் பார்க்காமல்... வணக்கம் வைக்காமல் தவிர்ப்பு
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் மேற்கொள்வதற்காக பாஜக மூத்த தலைவர் எச் ராஜா இன்று காஞ்சிபுரம் வருகை புரிந்தார். காமாட்சி அம்மனை தரிசனம் செய்த பின்பு செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழக அரசின் பொது பட்ஜெட் மற்றும் வேளாண்மை துறை பட்ஜெட் என இரண்டுமே யூஸ்லெஸ் பட்ஜெட் எனவும், ஒன்றும் தெரியாதவர் பட்ஜெட் போட்டால் என்ன ஆகும்? மக்கள் அனுபவிப்பார்கள்.
மேலும் சேகர்பாபு செல்ல அனுமதிக்க மறுத்த விவகாரத்தில் அவர் எதற்கு கோயிலுக்கு போக வேண்டும். கோயில் நிலங்களை அபகரிக்கும் நபர்களை சிறையில் அடைத்தும் சிறைச்சேதம் செய்யும் அளவிற்கு சட்டம் கொண்டு வர வேண்டும். கோயில் நிலங்களை தொடுபவர்கள் அச்சப்பட வேண்டும் என தெரிவித்தார்.
அனைத்துக் கட்சி எம்பிக்கள் கூட்டம் குறித்து கேட்டபோது, அரசியலில் ஆனா ஆவன்னா தெரியாதவர் கூட்டத்தைப் பற்றி நாம் பேசுவது வீண் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: நிதிப்பகிர்வு... சட்டப்பேரவையில் தனிநபர் தீர்மானம் நிறைவேற்றம்..! விஜய் அரசு அதிரடி முடிவு..!!