×
 

அடுத்த வீட்டு ஜன்னலை எட்டி பாக்குறதுலாம்... திமுகவை லெப்ட் ரைட் வாங்கிய எச். ராஜா!

என் டி ஏ கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளரை பாஜக நாடாளுமன்ற பொதுக்குழு தான் முடிவு செய்யும் என்று எச். ராஜா தெரிவித்துள்ளார்.

கருத்து வேறுபாடுகளால் பிளவுபட்ட அதிமுக - பாஜக கூட்டணி மீண்டும் இணைந்தது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிய நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் ஒரு கட்சிகளும் இணைந்து போட்டியிடுவது உறுதியானது. கூட்டணி குறித்த அறிவிப்பை தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்தார்.

அமித் ஷா கூட்டணி ஆட்சி தொடர்பாக பேசி வரும் நிலையில், எடப்பாடி பழனிச்சாமி கூட்டணி ஆட்சி என்பதை மறுத்துள்ளார். இருந்தாலும் அமித் ஷாவின் பேச்சு நிலையாக இருக்கிறது. கூட்டணிக் கொள்கையிலேயே குளறுபடிகள் இருப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில், என் டி ஏ கூட்டணி முதலமைச்சர் வேட்பாளரை பாஜக நாடாளுமன்ற குழு முடிவு செய்யும் என்று எச். ராஜா தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: நாங்க சொல்றத கேட்டு தான் ஆகணும்! எச். ராஜாவுக்கு நீதிமன்றம் தடாலடி உத்தரவு..!

இந்தியாவிற்கு எப்படி மோடி தீர்மானிக்கிறாரோ அதேபோல தமிழ்நாட்டிற்கு எடப்பாடி தீர்மானிப்பார் என்று அமித்ஷா கூறியிருப்பதாகவும், எதையும் தன்னால் கூற முடியாது எனவும் தெரிவித்தார். 

தன்னுடைய எல்லை என்பது மாநில அளவில் இருப்பதாகவும், திமுக அடுத்த வீட்டு ஜன்னலை எட்டி பார்ப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும். அது அநாகரிகம் என்றும் கூறினார். எங்களுடைய கூட்டணி தொடர்பான விஷயங்களை தலைமை முடிவு செய்யும் என்றும் தெரிவித்தார். 

அகில இந்திய தலைமையின் முடிவுக்கு பாஜக தொண்டர்கள் அனைவரும் கட்டுபட்டவர்கள் என்றும் அமித்ஷா வந்தார்... கண்டார்...வென்றார் என்றும் கூறினார். உங்களுடைய கூட்டணி விஷயங்களை மட்டும் பாருங்கள் என்றும் அதிமுக பாஜக கூட்டணியில் தலைகிட வேண்டாம் எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பவன் கல்யாண் வருவதை எதிர்க்கலாமா? மீரு எவரண்டி.. பதில் செப்பண்டி.. H.ராஜா தடாலடி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share