×
 

குடும்ப அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு: 2026ம் ஆண்டுக்கான ரேசன் கடை விடுமுறை நாட்கள் வெளியீடு!

தமிழக அரசின் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, 2026 ஆம் ஆண்டுக்கான ரேஷன் கடைகளுக்கான விடுமுறைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் சுமார் 7 கோடிக்கும் அதிகமான எளிய மக்கள் பயன்பெறும் வகையில், அரிசி, பருப்பு, கோதுமை, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களைக் குறைந்த விலையில் வழங்கி வரும் ரேசன் கடைகளுக்கான 2026 ஆம் ஆண்டுக்கான அதிகாரப்பூர்வ விடுமுறைப் பட்டியலைத் தமிழக அரசின் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ளது.

அடுத்த ஆண்டுப் பண்டிகைகள், தேசிய மற்றும் மதம் சார்ந்த முக்கிய நாட்களைக் கருத்தில் கொண்டு, மொத்தம் 23 நாட்களுக்கு ரேசன் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. குடும்ப அட்டைதாரர்கள் இந்த விடுமுறை நாட்களைக் கவனத்தில் கொண்டு பொருட்களை முன்கூட்டியே பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


2026 ஆம் ஆண்டிற்கான ரேசன் கடை விடுமுறைப் பட்டியல்

  • ஜனவரி - 1 வியாழன் ஆங்கிலப் புத்தாண்டு
  • ஜனவரி - 15 வியாழன் பொங்கல் பண்டிகை
  • ஜனவரி -16 வெள்ளி திருவள்ளுவர் தினம்
  • ஜனவரி - 17 சனி உழவர் தினம்
  • ஜனவரி - 26  திங்கள்  குடியரசுத் தினம்
  • பிப்ரவரி - 1 ஞாயிறு தைப்பூசம்
  • மார்ச் - 19 வியாழன் புனித வெள்ளி
  • ஏப்ரல் - 14 செவ்வாய் தமிழ்ப் புத்தாண்டு
  • மே - 1 வெள்ளி உழைப்பாளர் தினம் 
  • மே - 28 வியாழன் பக்ரீத் பண்டிகை 
  • ஜூன் - 26 வெள்ளி மொஹரம் பண்டிகை
  • ஆகஸ்ட் - 15 சனி சுதந்திர தினம்
  • ஆகஸ்ட் -  26 புதன் மிலாடி நபி
  • செப்டம்பர் -  4 வெள்ளி கிருஷ்ண ஜெயந்தி 
  • செப்டம்பர் - 14 திங்கள் விநாயகர் சதுர்த்தி
  • அக்டோபர் - 2 வெள்ளி காந்தி ஜெயந்தி
  • அக்டோபர் - 19 திங்கள் ஆயுத பூஜை
  • அக்டோபர் - 20 செவ்வாய் விஜய தசமி
  • நவம்பர் -  8 ஞாயிறு தீபாவளி பண்டிகை
  • டிசம்பர் -  25 வெள்ளி கிறிஸ்துமஸ்

இந்த விடுமுறைப் பட்டியல் மூலம், தமிழ்நாட்டில் ஏழை எளிய மக்களின் உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் ரேசன் கடைகளின் செயல்பாடுகள் பண்டிகை நாட்களிலும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நாட்களிலும் நிறுத்தப்படும் என்பது தெரிய வந்துள்ளது. குடும்ப அட்டைதாரர்கள் தங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை இந்த விடுமுறை நாட்களுக்கு முன்னர் திட்டமிட்டு பெற்றுக் கொள்வது அவசியமாகிறது.

இதையும் படிங்க: கே.என்.நேரு துறையில் ஊழல், வாட்ஸ்அப் சாட்டில் 'பார்ட்டி ஃபண்ட்' ஆதாரம் வெளியீடு - அண்ணாமலை அதிரடி!

இதையும் படிங்க: தெருவுக்கு தெரு டாஸ்மாக்..! ACCIDENT-ல் நம்பர்.1 தமிழ்நாடு... ஆனா இந்த திமுக இருக்கே... விளாசிய அண்ணாமலை...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share