×
 

காலையிலேயே அதிரடி... போத்தீஸுக்குள் நுழைந்த வருமான வரித்துறையினர்... சென்னையில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் தீவிர சோதனை...!

சென்னையில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது மற்றும் வரி ஏய்ப்பு போன்ற புகார்கள் தொடர்பாக கடந்த வாரம் சென்னையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். தியாகராய நகரில் உள்ள கெமிக்கல் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். கெமிக்கல் நிறுவனங்கள் நடத்தும் தொழிலதிபர்கள் வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரின் பேரில் சோதனை நடத்தியதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து, கடந்த இரு தினங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள பிரபல தொழிலதிபரின் வீடு உள்ளிட்ட 5 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக தொழிலதிபர் பிஷ்னோய், மருத்துவர் இந்திரா ஆகியோரது வீடுகளில் சோதனை நடைபெற்றது. 

இந்நிலையில் இன்று சென்னையில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது. 40க்கும் மேற்பட்ட வாகனங்களில் சென்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 

இதையும் படிங்க: மத்தவங்களுக்கு 200 எங்களுக்கு மட்டும் 100, 50 ஆ... ஓட்டு கேட்டு ஏரியா பக்கம் வா - அதிமுகவினரை ரவுண்ட் கட்டிய பெண்கள்...!

வழக்கமாக போலீஸ் அல்லது துணை ராணுவத்தினர் பாதுகாப்புடன் வருமான வரி சோதனை நடத்தப்படும்.  ழக்கத்துக்கு மாறாக தற்போது எந்த வித பாதுகாப்பும் இல்லாமல் ஐ.டி. சோதனை நடைபெற்று வருகிறது.

போத்தீஸில் ரெய்டு: 

சென்னையில் உள்ள பிரபல ஜவுளி நிறுவனமான போத்தீஸிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். ஜிஎன்செட்டி சாலையில் உள்ள போத்தீஸ் ஜவுளி நிறுவனத்தில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள போத்தீஸ் உரிமையாளரின் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.


 

இதையும் படிங்க: “எது வந்தாலும் நாங்கள் பார்த்துக்கிறோம்...” - மாணவர்களுக்கு தெம்பூட்டிய அன்பில் மகேஷ்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share