காலையிலேயே அதிரடி.. 10 இடங்களில் ஐ.டி. ரெய்டு.. வெளியானது பரபரப்பு தகவல்...!
சென்னை, காஞ்சிபுரம், வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பத்திற்கு மேற்பட்ட இடங்களில் வருமானவரைத்துறை சோதனையானது நடைபெற்று வருகிறது.
வருமானவரித்துறை அதிகாரிகள் 20க்கும் மேற்பட்ட வாகனங்கள்ல சென்னையில இருக்கக்கூடிய வருமானத்துறை அலுவலகத்தில் இருந்து புறப்பட்டிருக்கிறார்கள். காவல் துறையினருடன் இந்த வருமானத்துறை சோதனைக்காக பாதுகாப்பு பணிக்காக சென்றிருக்கிறார்கள். சென்னை, காஞ்சிபுரம், வேலூர் சுற்றுவட்டார பகுதிகள்ல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னையில் ஈக்காட்டுதாங்கல் டிபன்ஸ் காலனி பகுதியில் இருக்கக்கூடிய இன்டராக் பில்டிங் என்ற தனியார் நிறுவனத்தில் சோதனை வந்து தொடங்கி நடைபெற்று வருகிறது. இரும்புப்பொருள் தயாரிக்கும் தொழில் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சோதனையை பொறுத்தளவில இது வந்து அரசியல் பின்புலம் கொண்ட சோதனையாக இருப்பதற்கான வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. முழுக்க முழுக்க நிறுவனங்கள் தொடர்புடைய சோதனை என்றே வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இரு தினங்களுக்கு முன்பாக திமுக அமைச்சர் ஐ.பெரியசாமி, அவரது மகன் மற்றும் மகள் வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தப்பட்ட நிலையில், இன்று வருமான வரித்துறையினரின் சோதனையில் ஏதேனும் அரசியல் பின்புலம் இருக்கலாமா? என்ற சந்தேகம் எழுந்தது.
இதையும் படிங்க: சிக்கியது முக்கிய ஆவணங்கள்... சிக்கலில் சிவகாசி பட்டாசு ஆலை உரிமையாளர்கள்... ஐ.டி. சோதனையில் அதிரடி திருப்பம்...!
ஆனால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் வரி ஏய்ப்பு புகாரில் சிக்கியது தொடர்பான ஆவணங்களை அடிப்படையாக கொண்டே வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: திருமாவின் பேச்சு சரியல்ல… சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் கடும் எதிர்ப்பு