×
 

மிஷன் ஒலிம்பிக் 2036 சிறப்பு அதிகாரியாக ஐபிஎஸ் மயில்வாகனன் நியமனம்! தமிழ்நாடு அரசு உத்தரவு!

மிஷன் ஒலிம்பிக் 2036 இன் சிறப்பு அதிகாரியாக ஐபிஎஸ் அதிகாரி மயில்வாகனனை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) கீழ் செயல்படுத்தப்படவுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க 'மிஷன் ஒலிம்பிக் 2036' திட்டத்தின் சிறப்பு அதிகாரியாக, காத்திருப்போர் பட்டியலில் இருந்த மூத்த காவல்துறை அதிகாரி ஏ. மயில்வாகனன் ஐபிஎஸ்-ஐ நியமித்துத் தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வ அரசாணை வெளியிட்டுள்ளது.

வரும் 2036-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் குறைந்தபட்சம் 15 பதக்கங்களையாவது வென்று இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையுடன் தமிழக அரசு சிறப்புத் திட்டங்களை வகுத்துள்ளது. இதன் கீழ் அதிநவீன விளையாட்டு உட்கட்டமைப்புகளுடன் கூடிய ஒலிம்பிக் சிட்டி, உலகத்தரம் வாய்ந்த தடகளப் பயிற்சிகள், சர்வதேசப் பயிற்சியாளர்களின் வழிகாட்டல் மற்றும் மேம்பட்ட விளையாட்டுத் திறன் ஆராய்ச்சிப் பிரிவு உள்ளிட்ட பல்வேறு மெகா திட்டங்கள் அறிவிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இத்தகைய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 'மிஷன் ஒலிம்பிக் 2036' திட்டங்களை அடித்தட்டு நிலையிலிருந்து தீவிரமாகக் கண்காணித்து, உரிய செயல்திட்டங்களை வகுத்து வழிநடத்துவதற்காகத் தனி சிறப்பு அதிகாரியை நியமிக்க அரசு முடிவு செய்தது. அதன்படி, தமிழ்நாடு காவல்துறையில் பல்வேறு முக்கிய பதவிகளை மிகத் திறம்பட வகித்தவரும், விளையாட்டுத் துறையில் தனிப்பட்ட ஆர்வம் கொண்டு பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் நேரடியாகப் பங்கேற்றுப் பல பதக்கங்களையும் பாராட்டுகளையும் குவித்தவருமான மயில்வாகனன் ஐபிஎஸ்-க்கு இந்த உயரிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: விவசாய இலவச மின்சாரத்தில் தட்கல் முறை ரத்தாகுமா? ₹2,431 கோடி தணிக்கை குறித்து பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் வரலாற்றிலேயே முதன்முறையாக ஒரு ஐபிஎஸ் அதிகாரி சிறப்புப் பொறுப்பில் நியமிக்கப்பட்டிருப்பது அரசியல் மற்றும் விளையாட்டு வட்டாரத்தில் பெரும் கவனத்தையும் வரவேற்பையும் பெற்றுள்ளது. தனது கண்டிப்பான நிர்வாகத் திறன் மற்றும் விளையாட்டு ஆர்வத்தின் மூலம், தமிழகத்தின் மூலைமுடுக்குகளில் உள்ள கிராமப்புற விளையாட்டுத் திறமைகளைக் கண்டறிந்து அவர்களை ஒலிம்பிக் மேடைக்கு உயர்த்தும் உயரிய இலக்கோடு மயில்வாகனன் ஐபிஎஸ் விரைவில் இப்பொறுப்பை ஏற்கவுள்ளார்.

இதையும் படிங்க: தமிழகத்தில் கள்ளுக்கான தடையை நீக்க முடியாது! ஐகோர்ட் கிளையில் தமிழ்நாடு அரசு திட்டவட்டம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share