ஸ்டாலினுக்கு தோல்வி பயம்...! மகளிர் தொகை உயர்வுக்கு இதுதான் காரணம்... ஜெயக்குமார் விளாசல்..!
தோல்வி பயத்தால் மகளிர் உரிமைத்தொகை 2000 ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளதாக ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.
தமிழ்நாட்டு மகளிருக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியான செய்தியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் தற்போது மாதம் ரூ.1,000 பெற்று வரும் பெண்களுக்கு, திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அதாவது திராவிட மாடல் அரசு 2.0-இல் இந்தத் தொகை ரூ.2,000 ஆக உயர்த்தப்படும் என்று அவர் தெளிவாக வாக்குறுதி அளித்துள்ளார்.
இது வெறும் வாக்குறுதி மட்டுமல்ல, அதற்கு உடனடியாக ஒரு சிறப்பு நடவடிக்கையும் எடுத்திருக்கிறார் முதல்வர். பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான உரிமைத் தொகை முன்பணமாக ரூ.3,000-ஐயும், கோடைக்கால சிறப்புத் தொகுப்பாக மேலும் ரூ.2,000-ஐயும் சேர்த்து, மொத்தம் ரூ.5,000-ஐ இன்று காலையிலேயே 1.31 கோடி பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைத்துவிட்டார்.
இது ஒரு எதிர்பாராத சர்ப்ரைஸ் போலவே அமைந்துள்ளது. இந்த அறிவிப்பு தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் இந்த நேரத்தில் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். தோல்வி பயத்தால் மகளிர் உரிமைத் தொகையை 2000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்து இருப்பதாக விமர்சித்துள்ளார்.
இதையும் படிங்க: தூய்மை பணியாளர்கள் உணவில் கரப்பான் பூச்சி... உறுத்தலையா முதல்வரே..! அதிமுக அதிருப்தி..!
தேர்தலில் ஓட்டு வாங்க வேண்டும் என்பதற்காக மட்டுமே உரிமைத் தொகை உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்திருப்பதாக தெரிவித்துள்ளார். அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என வாக்குறுதி கொடுத்துவிட்டு திமுக வழங்கவில்லை என்று குற்றம் சாட்டினார். கல்விக்கடன் ரத்து, டீசல் விலை குறைப்பு போன்ற வாக்குறுதிகளை திமுக அரசு கொடுக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பெரும் மோதல் ஏற்பட வாய்ப்பு... சேலத்தில் உச்சக்கட்ட பதற்றம்... குவிந்த போலீஸ்....!