மேயர் பிரியா மீதான தாக்குதல்..!! முதல்வர் அனுமதிப்பது ஏன்..? கனிமொழி எம்பி கேள்வி..!
மேயர் பிரியாவுக்கு ஆதரவாக கனிமொழி எம்பி கருத்து தெரிவித்துள்ளார்
சென்னை மேயர் பிரியா சமீபத்தில் தனது தனிப்பட்ட அனுபவங்களைப் பற்றி வெளிப்படையாகப் பேசினார். அரசியல் வாழ்க்கையில் ஒரு பெண்ணாக அவர் எதிர்கொள்ளும் சவால்களை அவர் விரிவாக விளக்கினார். “ஏன் எப்போதும் நான் மட்டுமே?” என்று தொடங்கிய அவர், தான் செய்யும் எந்தச் செயலும் சர்ச்சையாக மாறிவிடுவதாகக் குறிப்பிட்டார். முதல் நாள் முதல் இன்று வரை, மிகச் சாதாரணமான விஷயங்களும் பெரிய பிரச்சினையாக மாற்றப்படுவதாக அவர் கூறினார்.மேயர் பிரியா தனது அனுபவங்களை உதாரணங்களுடன் விளக்கினார்.
“நான் ஒரு பர்கர் சாப்பிட்டாலும் அது பிரச்சினையாகிறது. தலைமுடியை வெட்டிக்கொண்டாலும் அதுவும் பிரச்சினையாகிறது,” என்று அவர் தெரிவித்தார். தான் எடுக்கும் ஒவ்வொரு தனிப்பட்ட முடிவும் கேள்விக்குள்ளாக்கப்படுவதோடு, விமர்சனத்திற்கும் உள்ளாகிறது என்பதை அவர் சுட்டிக்காட்டினார். சில நேரங்களில் இது தான் ஒரு பெண் என்பதாலோ அல்லது ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதாலோ நடக்கிறதோ என்ற சந்தேகம் தனக்கு ஏற்படுவதாகவும் அவர் பகிர்ந்துகொண்டார்.
பொதுவாழ்வில் ஈடுபடும் பெண்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் தொடர்ந்து விமர்சனத்திற்கும் கேலிக்கும் உள்ளாக்கப்படக் கூடாது என்று மேயர் பிரியாவுக்கு ஆதரவாக கனிமொழி எம்பி பேசி உள்ளார். ஆணாதிக்கம் நிறைந்த சமூகத்தில் அரசியலில் நுழைவதே சவாலானது; ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண் அதில் நுழைவது அதைவிடக் கடினமானது என்றார்.
இதையும் படிங்க: வேடிக்கை பார்த்துவிட்டு ஹீரோயிசம் காட்டுவதா..?? பொங்கிய கனிமொழி.. சரமாரியாக எழுந்த கேள்விகள்!!
இத்தகைய தடைகளைத் தகர்த்து முன்னேறும் பெண்களைக் குறிவைப்பது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. மேயர் தபிரியா ராஜனுக்கு திட்டமிட்டுத் தொடர்ந்து உருவாக்கப்படும் சர்ச்சைகளை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் என தெரிவித்தார். “எந்தப் பெண்ணைப் பற்றியும் யாரும் தவறாகப் பேசுவதை அனுமதிக்க மாட்டேன்" என்று முதலமைச்சர் விஜய் கூறுகிறார்., அப்படியிருக்க, மேயர் பிரியா மீதான இத்தகைய தாக்குதல்களைத் தனது ரசிகர்களும் தொண்டர்களும் நடத்துவதை அவர் ஏன் அனுமதிக்கிறார் என கேட்டுள்ளார்.
இதையும் படிங்க: தனியாருக்கு கொடுக்க விஜய்க்கு எவ்வளவு ஆர்வம்..? தவெக அரசு முடிவுக்கு TTV தினகரன் எதிர்ப்பு..!