23 வயது பெண் செய்த அசிங்கம்... பார்த்ததும் ஆடிப்போன போலீஸ்
சென்னை திருவிக நகரில் கஞ்சா வைத்திருந்த 23 வயது இளம் பெண் கைது செய்யப்பட்டார்.
இன்றைய இளம் தலைமுறைக்கு போதைப்பொருட்கள் என்பது வெறும் அச்சுறுத்தலாக மட்டுமல்ல, அவர்களின் தினசரி வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிவிட்டது. போதைப் புழக்கத்தில், OG கஞ்சா என்பது உயர்தர, தூய்மையான அல்லது அசல் வகை கஞ்சாவைக் குறிக்கும் – இது வெளிநாட்டு செடிகளிலிருந்து தயாரிக்கப்பட்டு, அதிக THC (டெட்ராஹைட்ரோகனாபினால்) அளவைக் கொண்டிருக்கும்.
இந்தப் புழக்கத்தின் விளைவுகள் ஆபத்தானவை. உடல்நலம் ரீதியாக, OG கஞ்சா போன்ற உயர்தர வகைகள் THC அளவு அதிகமாக இருப்பதால், மூளையின் செயல்பாட்டை பாதிக்கின்றன. குறிப்பாக 17 வயதுக்கு முன் தொடங்கினால், நினைவாற்றல் குறைவு, மனநோய், மனச்சோர்வு போன்றவை ஏற்படும். இளம் வயதில் உட்கொள்ளல் மூளையின் வளர்ச்சியைத் தடுக்கிறது. இது பள்ளி தோல்வி மற்றும் வேலையின்மைக்கு வழிவகுக்கிறது. சமூக ரீதியாக, இது குடும்பங்களை சீரழிக்கிறது.
பெற்றோர்களின் போதை பழக்கம் குழந்தைகளுக்கு மரபணு ரீதியாகவும் பரவுகிறது. போதை பொருட்கள் பயன்பாட்டை கட்டுப்படுத்த அவ்வப்போது போலீசார் சோதனை மேற்கொண்டு கஞ்சா விற்பவர்களை கைது செய்து வருகின்றனர். சென்னை திரு வி கா நகரில் கஞ்சா வைத்திருந்த 23 வயது இளம்பெண்ணை போலீசார் கைது செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: நாங்க செத்தா முதலமைச்சர் தான் காரணம்... கதறி துடிக்கும் தூய்மை பணியாளர்கள்!
அவருடன் இருந்த 17 வயது சிறுவனை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் போலீசார் சேர்த்தனர். கைது செய்யப்பட்ட பெண்ணிடம் இருந்து 30 கிராம் OG கஞ்சா, 1 கிலோ கஞ்சா, 90 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: மீண்டும் ஓர் மெரினா புரட்சியா? தூய்மை பணியாளர்களை தேடித் தேடி கைது செய்யும் போலீஸ்…